திடீர்னு எடப்பாடி பழனிசாமி செய்த "அந்த" காரியம்.. அதுவும் மேடையிலேயே.. மலைத்த தமிழ்நாடு.. கிரேட்
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் ஒருசில செயல்பாடுகள் அனைவருக்கும் வியப்பை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அப்படித்தான், நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்துள்ளது.
2 வருடங்களுக்கு முன்பு, சென்னை ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் ஒரு கல்யாணம் நடந்தது.. இந்த கல்யாணத்தில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பங்கேற்றிருந்தார்.

அமைதியாக மண்டபத்திற்குள் நுழைந்தார் எடப்பாடியார். மணமக்களை வாழ்த்துவதற்காக, மேடைக்கு சென்றார்.. நேராக போய் மணமக்களிடம் நிற்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அந்த மேடையின் ஒரு ஓரமாக போனார்.. இதனால் ஒரு நிமிஷம் எல்லாருமே குழம்பி போய்விட்டனர்..
மணமேடை: அங்கிருந்த மூலையில், தனது செருப்பை கழட்டி போட்டுவிட்டு, அதன்பிறகே மணமக்களை சென்று வாழ்த்தினார். அதே மேடையில், அனைவருமே செருப்பும், ஷூவுமாக நின்றிருந்தனர். ஆனால், செருப்பில்லாமல் மேடைக்கு சென்றது எடப்பாடி பழனிசாமி மட்டுமே.. செருப்பை போட்டுக் கொண்டு மணமக்களை வாழ்த்துவதையும் அவர் விரும்பவில்லை... ஒரு ஓரமாக கழற்றி போட்டுவிட்டு வாழ்த்தியதை பலரும் வியந்து பார்த்தனர்.
அதாவது தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்லும்போது, கால்களில் செருப்பு போடக்கூடாது என்பது மரியாதை.. இதை யாருமே அவ்வளவாக கடைப்பிடிக்காத போது, எடப்பாடியின் இந்த செயல் அப்போது ஆச்சரியத்தை தந்து விட்டது.. இப்போது என்றில்லை.. எப்போதுமே எடப்பாடி இப்படித்தான்.. ஒருமுறை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு புதுமண தம்பதியினர் ரோட்டோரம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து வாங்க காத்திருந்தனர்.
புதுமண தம்பதி: அவர்களை பார்த்ததுமே, காரைவிட்டு இறங்கிய எடப்பாடி பழனிசாமி, ரோட்டிலேயே செருப்பை கழட்டி வைத்துவிட்டுதான் மணமக்களுக்கு வாழ்த்து சொன்னார்.. இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்தின் மகள்களின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றிருந்தார்.. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.

சபாஷ் எடப்பாடி : நாட்டியம் முடிந்தபிறகு, நடனமாடியவர்களை வாழ்த்துவதற்காக மேடைக்கு சென்றார் எடப்பாடி பழனிசாமி.. அப்போதும், செருப்பை கழட்டிவிட்டு, மேடையில் ஏறி, மகாலிங்கத்தின் மகள்களுக்கு மனம்நிறைந்த வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தார்.. அவருடன் மேடைக்கு சென்ற பாதுகாப்பு அதிகாரியும் ஷூ அணிந்து சென்ற நிலையில், எடப்பாடி வெறுங்காலுடன் சென்று, நடன மங்கையர்களுக்கு பூங்கொத்து தெரிவித்து வாழ்த்தினார்.. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications