வெண்ணிற ஆடை நிர்மலாவை கலங்கடித்த "நபர்".. ஆஹா.. ஒருத்தன் காக்கா காக்காவா" வாந்தி எடுத்தானாம்.. அருமை
சென்னை: அள்ளி அள்ளி தருவதுடன், யாரையுமே மதித்து நடக்க வேண்டும் என்பதில், இறுதிவரை உறுதிப்பிடிப்புடன் திகழ்ந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.. அதற்கு ஒரு உதாரணம்தான் இந்த சம்பவம்.
தமிழ் சினிமாவில், தயாள குணம் படைத்த மனிதர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் எம்ஜிஆர்தான்... அந்த அளவிற்கு இவரது குணத்தை பற்றி, இன்று வரை மீடியாவில் வெளிவந்தவண்ணம் உள்ளது.

அதிலும் எம்ஜிஆருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பல்வேறு அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அப்படித்தான், ஒருமுறை மூத்த கலைஞர் வெண்ணிற ஆடை நிர்மலா, மக்கள் திலகம் குறித்து ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார்.
கல்யாணம்: தமிழ்ப்பட உலகில் மிகச்சிறந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.. அசாத்திய திறமைசாலி.. இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.. அருணாச்சலம் படம் ஷூட்டிங்கின்போதும், "கல்யாணம் பண்ணாம உங்களை எப்படி விட்டு வெச்சாங்க" என்று ரஜினிகாந்த் ஆச்சரியமாக இவரிடம் கேட்டாராம்..
சந்தேகம்: வெண்ணிற ஆடை நிர்மலா இதற்கான விளக்கத்தை சொல்லும்போது, "என் அப்பாவோட சந்தேக குணம்... ஏன்னா, என் அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க.. நாம கொஞ்சமும் நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு எங்கப்பா, எங்கம்மாவை சந்தேகப்படுவார்... அப்பா மாதிரியே நமக்கும் யாராவது ஹஸ்பண்ட் அமைஞ்சுட்டா என்ன பண்றது?அப்படிங்கிற பயம் வந்துடுச்சு.. அந்த பயத்துலேயே கல்யாணத்தை ஒத்திப்போட்டுட்டு வந்துட்டேன்'' என்கிறார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்ததுடன், அவர்களிடம் தாம் பார்த்த உயர்ந்த குணங்களையும் போற்றுபவர் வெண்ணிற ஆடை நிர்மலா... வள்ளல் குணம் என்பதையும்தாண்டி, ஒருவரின் உணர்வுக்கு எந்த அளவுக்கு எம்ஜிஆர் மதிப்பு தந்திருந்தார் என்பதற்கு, ஒரு உதாரணத்தையும் வெண்ணிற ஆடை நிர்மலா ஒருமுறை கூறியிருந்தார்.
ஆச்சரியம்: அந்தவகையில், தன்னுடன் நடித்த ஹீரோக்களிடம், தாம் பார்த்து வியந்த உயரிய குணங்கள் பற்றி கூறியிருந்தார்.. அதில், எம்ஜிஆர் குறித்து ஒருமுறை சொல்லும்போது, "முதன்முதலில் நான் அவரிடம் ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவென்றால், எம்ஜிஆர் நடிக்கும் எந்த ஷூட்டிங்கிலும், டேபிள் சேர் ஒன்று போட்டு வைத்திருப்பார்கள்..
அதில், டேபிள் லைட் ஒன்றும் வைத்திருப்பார்கள்.. ஷூட்டிங் பிரேக் நேரத்தில், எம்ஜிஆர் இந்த சேரில் உட்கார்ந்து ஏதோ எழுதி கொண்டே இருப்பார்.. இவர் அடிக்கடி ஏதோ எழுதிக்கொண்டே இருக்கிறாரே என்று, ஒருநாள் அருகில் சென்று கவனித்தேன்.. அப்போதுதான், அரசியல் தொடர்பாக பலருக்கு கைப்பட பதில்களை, விளக்கங்களை, கண்டனங்களை, அவரே எழுதி கொண்டிருந்தார்..
கண்டனங்கள்: உடனே நான் அவரிடம் கேட்டேன், "ஏன் சார், ஒரு செக்கரட்டரி யாரையாவது வைத்துக்கொள்ளலாமே? நீங்கள் சொல்லும் பதில்கள், அல்லது கண்டனங்களை அவர்கள் நோட்ஸ் எடுத்துக்கொண்டு, விரிவாக எழுதுவார்களே... நீங்கள் எதுக்காக உங்கள் கைப்பட எழுத வேண்டும்? என்று கேட்டேன்..
அதற்கு எம்ஜிஆர், நாம அந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாது.. "ஒருத்தன் கருப்பா வாந்தி எடுத்தானாம்.. ஆனால், இந்த விஷயம், நாலஞ்சி பேர் மூலமாக மாறி மாறி போகும்போது, "காக்கா காக்காவா" வாந்தி எடுத்தான்னு அந்த வார்த்தையே திரிஞ்சி போயிடும்.. அதுமாதிரி நாம சொல்லக்கூடிய விஷயம் என்னவோ, அதற்கு நேர்எதிரான விஷயமாக வெளிப்பட்டுவிடக்கூடாது.. அதனால் எந்த ஒரு கருத்தையும் நாமே சொன்னால்தான் அது சரியாக இருக்கும்" என்று கூறினாராம் எம்ஜிஆர்.
அட்மின்: ஒருவரின் உணர்வுகளை மதித்து போற்றுதல் என்ற சிறந்த குணம், இயல்பாகவே எம்ஜிஆரிடம் இருந்திருக்கிறது.. இன்றைக்கு ட்விட்டரில் "அட்மினை" போட்டு பலர் பதிவுகளை எழுதி கொண்டிருக்கும்போது, எம்ஜிஆர் எவ்வளவு ஷார்ப்பாக அப்போது சிந்தித்துள்ளார் பாருங்களேன்..!!












Click it and Unblock the Notifications