மைக்ரோ நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் கிரெடிட் கார்டு.. எம்எஸ்எம்இ கடன் குறித்து குட்நியூஸ்
சென்னை: நாட்டில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை தந்து வரும் சிறுகுறு நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். இதுபற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மைக்ரோ நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் தனிப்பயனாக்கப்பட்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்றும் முதல் ஆண்டில் 10 லட்சம் அட்டைகள் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது என்றும் கூறினார்.
நடப்பு 2025-26 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு லோக்சபாவில் தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட்டில் விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு விஷயங்களை அறிவித்தார். குறிப்பாக பருத்தி உற்பத்தியை அதிகரிக்க அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் வேளான் உற்பத்தியில் சற்று பின் தங்கியுள்ள 100 மாவட்டங்களில் விவசாய மேம்பாட்டிற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இதேபோல் கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அளவு 3.5 லட்சத்திலிருந்து 5 லட்சங்கள் ஆக அதிகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். வேலை வாய்ப்புக்காக பிற இடங்களை தேடும் செல்லாத சூழலை ஏற்படுத்தும் வகையில் மக்கள் அவர்கள் வாழக்கூடிய இடங்களிலே தொழில்துறையை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
இதேபோல் நாட்டில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை தந்து வரும் சிறுகுறு நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். இதுபற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், நாட்டில் 5.7 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தற்போது இந்த எம்எஸ்எம்இ துறை இந்திய உற்பத்தியில் 5% க்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறது, சிறுகுறு நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு ஏற்றுமதியில் 45% அளவிற்கு உள்ளது. எம்எஸ்எம்இயில் முதலீடு, விற்றுமுதல் வரம்புகள் 2.5 மடங்கு அதிகரிக்கப்படும். கடன் உத்தரவாத பாதுகாப்பு அதிகரிக்கப்படும். தற்போது சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.5 கோடியாக உள்ள நிலையில், அது ரூ.10 கோடி வரை அதிகரிக்கப்படும்.
சிறுகுறு நிறுவனங்களை ஊக்குவிக்க அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். ஏற்றுமதியாளர் எம்எஸ்எம்இக்களுக்கு ரூ.20 கோடி வரை கடன் வழங்கப்படும். மைக்ரோ நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் தனிப்பயனாக்கப்பட்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும். முதல் ஆண்டில் 10 லட்சம் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications