ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 1500 இடங்கள்.. சென்னையே ஜொலிக்கப்போகுது.. சூப்பர் திட்டம்
சென்னை: சென்னையில் இருள் சூழ்ந்த பகுதிளை அடையாளம் கண்டு தெருவிளக்குகளை பொறுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் சாலைகளில் பயணிப்பவர்களின் பாதுகாப்பிற்காகவும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காகவும் சென்னை மாநகராட்சி புதிதாக நிர்பயா நிதி மூலம் 1500 இடங்களில் தெருவிளக்குகளை பொறுத்த திட்டமிட்டுள்து.
சென்னையில் தற்போதைய நிலையில் 2.9 லட்சம் தெருவிளக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் சென்னையுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இருள் சூழ்ந்த பகுதிகளில் எங்கெல்லாம் தெருவிளக்குகள் வேண்டும் என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

குறிப்பாக 2011ல் சென்னை மாநகருடன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டன.இந்த பகுதிகளுக்கு தெருவிளக்கு உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் இந்த பகுதிகளில் புதிதக 10800 தெருவிளக்குகள் பொறுத்த வேண்டும் என போலீசார் அடையாளம் கண்டனர். அதற்காக கடந்த நிதியாண்டில் 68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
9300 இடங்களை அடையாளம் கண்டு இருள் சூழ்ந்த பகுதிகளில் தெருவிளக்குகள் பொறுத்தப்பட்டன.இந்நிலையில் இன்னும் 1500 இடங்களில தெருவிளக்குகள் பொறுத்தும் பணி விரைவில் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் சென்னையின் உள்பகுதிகள், கடற்கரை பகுதிகளில் சேதம் அடைந்தவற்றை மாற்றுவதற்கும் மாநகராட்சி இந்த நிதியாண்டில் கூடுதலாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுளளது. மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் கட்டப்பட்டது போதும், பாதள சாக்கடை தோண்டியபோதும் தெருவிளக்குகள், தெருவிளக்கு கம்பங்கள் அகற்றப்பட்டதாக புகார்கள் மாநகராட்சிக்கு வந்தது.
அப்படி மின்கம்பங்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் பொறுத்தும் பணியும் நடந்து வருகிறது. சில இடங்களில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டிய உள்ளது. அதற்கு டெண்டர் விடும் பணிகள் நடக்கபோகிறது. அதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆவது ஆகும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications