கிளாம்பாக்கம் "கியரே" மாறுதே..பெருங்களத்தூரில் "2 ஆச்சரியங்கள்" நடக்கபோகுது.. சென்னைவாசிகளுக்கு ஜாலி
சென்னை: பெருங்களத்தூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சென்னைவாசிகளும் பூரித்து போய் உள்ளனர்.. இதற்கு 2 விதமான காரணங்கள் உள்ளனவாம்..!!
பெருங்களத்தூர் பகுதியை பொறுத்தவரை, சென்னைக்கு வெளியே உள்ள புறநகர் பகுதியாகும்.. ஆனால், முக்கியமான கல்லூரிகள் இந்தப் பகுதியில்தான் இயங்கி வருகின்றன.. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒருபக்கமும், டெக்னாலஜி மறுபக்கமும் என பெருங்களத்தூரே பிஸியாகி விட்டது..
இந்நிலையில், பழைய பெருங்களத்தூரில் புதிய ஷாப்பிங் மால் ஒன்று விரைவில் வரப்போவதாக சொல்கிறார்கள்.. காமராஜர் சாலையில், 11000 சதுர அடி நிலத்தில், 2 கோடி செலவில், இந்த ஷாப்பிங் மால் கட்டும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது..

ஷாப்பிங் மால்: பழைய பெருங்களத்தூர் காமராஜர் மேம்பாலத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டவுடன் 30 கடைகள் அமைக்கப்படும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, பரந்து விரிந்துள்ள இந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸில், ஓட்டல்கள், ஏடிஎம் வங்கிகள் என அனைத்துமே இடம்பெற போகிறதாம்.. இதனால் ஷாப்பிங் செய்ய வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான போதுமான அளவு பார்க்கிங் வசதியும் தயாராகி கொண்டிருக்கிறதாம்.
இதேபோல இன்னொரு குட்நியூசும் வரப்போகிறது.. பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், மேம்பாலம் ஒன்று மாநில நெடுஞ்சாலை- ரயில்வே நிர்வாகம் இணைந்து, மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.. இதற்காக, 234 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து முடிந்துள்ளன.. திடீரென கொரோனா தொற்று காரணமாக, தொய்வில் இருந்த இந்த பணிகள், மறுபடியும் வேகமெடுத்தன.
இப்போது, பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில், ரயில்வே தண்டவாளத்தை கடந்த, சீனிவாசா நகரில் இறங்கும் பாலம், முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.. இது விரைவில் திறக்கப்படவும் உள்ளது..
இனி ஈஸியா போகலாம்: அநேகமாக இந்த மாத இறுதிக்குள் இந்த ரயில்வே மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்கிறார்கள்.. அப்படி பாலம் திறக்கப்பட்டுவிட்டால் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்துவிடும்.. பீர்க்கன்கரனை புதிய பெருங்களத்தூர் பகுதியில் சீனிவாசன் ராகவன் நகரை நோக்கி, போக்குவரத்து இனி எளிதாக செல்லும்..

மேலும், சீனிவாச நகரிலிருந்து வரும் வாகனங்கள் நேராக ரயில்வே மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலைக்குள் வந்து, பிறகு, தாம்பரத்தை அடையலாம்.. இதையடுத்து, பெருங்களத்தூர் தண்டவாளத்தை கடந்து செல்ல உதவும் ரயில்வே கேட்டும் விரைவில் மூடப்படும் என்கிறார்கள். காரணம், இந்த ரயில்வே கேட் வழியாக வரும் வாகனங்களும், ஜிஎஸ்டி சாலையில் சேரும்போதுதான், இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகின்றன..
2 லட்டு: பெருங்களத்தூர் என்றாலே போக்குவரத்து நெரிசல் என்று சொல்லும் அளவுக்கு காரணம், இந்த ரயில்வே கேட்தான். அதனால், தான், பெருங்களத்தூர் ரயில்வே கேட்டை மூடுவது என முடிவாகி உள்ளதாம்.,. இதுகுறித்து ரயில்வே கேட்டை மூடுவது குறித்து அதிகாரிகள் விரைவில் முடிவு செய்வார்கள் என்கிறார்கள். ஆக மொத்தம் பெருங்களத்தூரே புத்தம் புது பொலிவுடன் தயாராகி வருவது, தாம்பரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த சென்னைக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications