குட்நியூஸ்.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு.. தமிழக பள்ளிக்கல்வி துறையின் சர்ப்ரைஸ் பாருங்க.. ஹேப்பி
சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு இனிப்பு செய்தி வெளியாகி உள்ளது.. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.. அதேபோல, மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடந்து முடிந்திருக்கிறது.

பொதுத்தேர்வு: பொதுத்தேர்வுகள் முடிந்ததுமே, ஏப்ரல் 12ம் தேதியே விடைத்தாள் திருத்தும் பணிகளும் துரிதமாக ஆரம்பமானது.. இதற்கெனவே மொத்தம் 88 சென்டர்களில் 50000 ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டார்கள்.. கடந்த ஏப்ரல் 22ம் தேதி வரை திருத்தும் பணிகள் நடந்து முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.. இதில் , 10ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதற்காக மட்டும், மாநிலம் முழுதும், 103 மையங்களில் பணிகள் நடந்த நிலையில், இப்பணிகளும் முடிவடைந்துவிட்டன..
எனவே, மதிப்பெண்களின் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்களின் விபரங்களுடன் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் அப்லோடு செய்யும் பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது..
அரசு தேர்வு துறை: அரசு தேர்வு துறையின் அலுவல் பணி சார்ந்த ஆன்லைன் தளத்தில், மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டும் வருகின்றன.. அதனால், ஏற்கனவே திட்டமிட்டப்படி மே 10-ம் தேதி தேர்வு முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை தயாராகி வருகிறது.
இந்நிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதாவது, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில், சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், பல்வேறு பாடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை... அந்தவகையில், தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிய வந்திருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை: இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை துணைத்தேர்வின்போது தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானபிறகு அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும், தேர்வு எழுதாத மாணவர்களையும் இணைத்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பின்னர் அனைவரையும் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள்: ஆக, தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கும், தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. இதனால், இவர்களும் உடனடியாக தேர்வு எழுதி, இந்த கல்வியாண்டிலேயே தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு செல்ல முடியும் என்பதால், மிகுந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications