சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போறீங்களா.. இன்று எஸ்இடிசி உங்களுக்காக வெளியிட்ட குட்நியூஸ்
சென்னை: வரும் செப்டம்பர் 2-ம் தேதி (சனிக்கிழமை), செப்டம்பர் 3 (ஞாயிறு) சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வார இறுதிகளில் ஊருக்கு செல்வதே இப்போது பெரிய விஷயம் ஆகிவிட்டது. குறிப்பாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போகவும், திரும்ப சென்னை வரவும் தமிழக அரசு விடும் சிறப்பு பேருந்துகள் தான் கைகொடுக்கின்றன.

பொதுவாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை சொந்த ஊரில் கழிக்க பலர் விரும்புகிறார்கள். பிழைப்புக்காக சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வரும் மக்கள் சுபமுகூர்த்த தினங்கள், விடுமுறைதினங்களில் கண்டிப்பாக சொந்த ஊருக்கு செல்வதையே விரும்புவார்கள்.
ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் ஆம்னி பேருந்துகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு டிக்கெட் கட்டணம் இருக்கும். ரயிலில் 3 மாதத்திற்கு முன்பே டிக்கெட்டும் கிடைப்பது இல்லை.. அரசு பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்திருக்கும். இப்படியான சூழலில் திடீரென விஷேசங்கள் மற்றும் மருத்துவ சூழலுக்காக அல்லது ஏதேனும் காரணத்திற்காக ஊருக்கு செல்லும் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அரசுவிடும் சிறப்பு பேருந்துகள் தான்.
அந்த வகையில் ஒவ்வொரு வார இறுதியிலும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்து வருகிறது. சென்னை கோவை, திருப்பூர், பெங்களூரு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருச்சி, நாமக்கல், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் இன்று சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வரும் 2-ம் தேதி (சனிக்கிழமை), செப்.3 (ஞாயிறு) சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்.1) சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 400பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications