அரசு பள்ளி மாணவர்களுக்கு வந்த குட் நியூஸ்.. கீழடி உட்பட கல்வி சுற்றுலா.. சபாஷ் பள்ளிக்கல்வித்துறை
சென்னை: அரசு பள்ளி மாணவர்களை விரைவில் கல்வி சுற்றுலாவாக கீழடி போன்ற தொல்லியல் அகழாய்வு இடங்களுக்கு கூட்டி செல்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். படிப்போடு சேர்ந்து திறமையை மாணவர்கள் வளர்ப்பது அவசியம். நமது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 5 கோடி ரூபாய் செலவில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

முதலில் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு, 282 மாணவர்கள் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னையில் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், அம்மாணவர்களுக்கான 6 நாள் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
கல்வித்துறை அமைச்சர்
ஓவியம், சிற்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம், பொம்மலாட்டம் கலைக்கான பயிற்சி தரப்பட்டு, அதில் சிறந்த முறையில் செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
"மாணவர்கள் பெறும் மதிப்பெண் மட்டுமல்ல, தனித்திறமை தான் அவர்களை தனித்துவமாக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்வார்.. 3 வருடங்களுக்கு முன்பு இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது 34 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இப்போது 60 லட்சம் பேர் கலைச்சிற்பி திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கலை பயிற்சி வழங்கப்படுகிறது. பரதம், நாடகம், ஓவியம், இசை பயிற்சி கடந்த 16ம் தேதியிலிருந்து அளிக்கப்பட்டு வருகிறது. திறமையை வளர்க்க வாய்ப்பும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கலாச்சாரத்தின் மூலமாக பண்பாட்டை வளர்க்கும் திட்டமாக உள்ளது. மாணவர்கள் கலைஞர்களாக மாறியுள்ளனர்.
நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் மட்டுமல்ல, ஜஸ்ட் பாஸ் வாங்கும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பது தான் எங்கள் நோக்கம். படிப்போடு சேர்ந்து திறமையை மாணவர்கள் வளர்ப்பது அவசியம். நமது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்க்க கூடாது.
ஒப்பீடு கூடாது
அரசு பள்ளி மாணவ மாணவியர்களை கல்வி சுற்றுலாவாக கீழடிக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
நம்முடைய மாநிலத்தின் அகழாய்வு தளங்களை இளம் மாணவர்கள் நேரில் பார்ப்பதற்கும், நம்முடைய பண்பாட்டை தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தொல்லியல் தளங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான திட்டத்தை விரைவில் முன்னெடுக்க உள்ளோம் " என்ற மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜெர்மன் நாட்டுக்கு 22 மாணவர்கள்
கல்வி மட்டுமின்றி, கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை வெளிநாடுகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது..
இதைத்தொடர்ந்து, கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்படும் மாணவர்களை தேர்வு செய்து அவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த வகையில், இந்த வருடம் 22 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ், "பள்ளிக் கல்வித் துறை நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக நான்கு நாட்கள் ஜெர்மனி நாட்டிற்கு செல்லவுள்ளனர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications