எஸ்பிஐ குட் நியூஸ்: 444 நாட்கள் முதலீடு செய்தால் ரூ. 35,000 லாபமா? SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: எஸ்பிஐ வங்கியின் 444 நாட்கள் அம்ரித் விருஷ்டி சிறப்பு திட்டம் சாதாரண எஃப்டி திட்டங்களை விட அதிக வட்டி லாபத்தை வழங்குகிறது.. 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் வருமானம் கிடைக்க இந்த புதிய திட்டம் வழிவகை செய்கிறது.. பாதுகாப்பான அரசு வங்கி சேமிப்பில் அதிக லாபம் ஈட்ட நினைப்பவர்களுக்கு இந்த எஸ்பிஐ திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.. அதை பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்.
இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதங்களை குறைத்ததன் தாக்கம் தற்போது வங்கிகளின் டெபாசிட் திட்டங்களில் எதிரொலிக்க தொடங்கிவிட்டது.. குறிப்பாக அரசு வங்கிகளில் நிலையான வைப்பு நிதி எனப்படும் எஃப்டி திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.

எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம்
இத்தகைய சூழலில் பொதுமக்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பான மற்றும் கூடுதல் லாபம் தரும் ஒரு வழியாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது அம்ரித் விருஷ்டி எனும் சிறப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ளது.. ஏற்கனவே 400 நாட்கள் கொண்ட அம்ரித் கலாஷ் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது 444 நாட்கள் கொண்ட இந்த புதிய திட்டத்தை எஸ்பிஐ அறிமுகம் செய்துள்ளது.
வங்கி கஸ்டமர்கள் தங்களது உழைப்பில் சேர்த்த பணத்தை பாதுகாப்பாகவும் அதேசமயம் மற்ற சாதாரண திட்டங்களை விட கூடுதல் வட்டி கிடைக்கும் வகையிலும் முதலீடு செய்ய இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.. இந்த திட்டத்தில் பொதுவான வாடிக்கையாளர்களுக்கு 6.45 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 6.95 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது..
மிக உயர்ந்த வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கியின் அதிரடி மாற்றங்களுக்கு பிறகு எஸ்பிஐ வழங்கும் மிக உயர்ந்த வட்டி விகிதம் இதுதான் என்பது மிக முக்கியமான ஸ்பெஷாலிட்டியாகும்... ஒரு வாரம் முதல் 10 வருடங்கள் வரை நீடிக்கும் சாதாரண டெபாசிட் திட்டங்களில் 3.05 சதவீதம் முதல் 6.40 சதவீதம் வரை மட்டுமே வட்டி கிடைக்கிறது.. ஆனால் இந்த 444 நாட்கள் கொண்ட சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் பணத்திற்கு அதிக லாபத்தை உறுதி செய்ய முடியும்..
அதுமட்டுமல்ல இந்த திட்டத்தின் இன்னொரு ஸ்பெஷல் அம்சம், இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்தே முதலீடு செய்ய முடியும் என்பதுதான். அதேபோல் வசதி படைத்தவர்கள் 3 கோடி ரூபாய் வரை கூட இதில் சேமிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது..
வட்டி, முதலீடு, லாபம்
உதாரணத்திற்கு ஒரு சாதாரண நபர் 5 லட்சம் ரூபாயை இந்த திட்டத்தில் 444 நாட்களுக்கு முதலீடு செய்தால் அவருக்கு வட்டியாக மட்டும் 33,038 ரூபாய் கிடைக்கும்.. இதனால் முதிர்வு காலத்தில் அவர் கையில் 533038 ரூபாய் மொத்தமாக வந்து சேரும்.. அதுவே 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் அவர்களுக்கு வட்டியாக 35666 ரூபாய் கிடைக்கும்.. ஆக மொத்தம் 535666 ரூபாயை அவர்கள் முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் பங்குச்சந்தை போன்ற அபாயகரமான முதலீடுகளை விட எஸ்பிஐ போன்ற நம்பகமான அரசு வங்கிகளில் பணத்தை சேமிப்பது மக்களுக்கு நிம்மதியை தருகிறது.. வட்டி விகிதங்கள் பொதுவாக குறைந்து வரும் இந்த நேரத்தில் அம்ரித் விருஷ்டி போன்ற சிறப்பு திட்டங்கள் நடுத்தர மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
எனவே இந்த திட்டத்தில் சேர ஆசை உள்ளவர்கள், வங்கியின் கிளைகளுக்கு நேரில் சென்றோ அல்லது யோனோ செயலி மற்றும் வெப்சைட் வங்கி வசதி மூலமாகவோ மிக எளிதாக இணைந்து கொள்ளலாம்.. குறைந்த காலத்தில் அதிக லாபம் மற்றும் அசல் தொகைக்கு முழு பாதுகாப்பு என அனைத்து வசதிகளும் இத்திட்டத்தில் அடங்கியுள்ளன..!!












Click it and Unblock the Notifications