ஊரடங்கு முடியும் வரை மின் தடை இல்லை.. குட்நியூஸ் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி!
சென்னை: மின்தடைக்காக அனுமதி தருவது முழு ஊரடங்கு முடியும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிக்காக மின் வாரியத்தால் தரப்படும் மின்தடைக்கு அனுமதி தருவது ஒத்திவைக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்
ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை
எடுக்கப்படுவதாவும் அவர் கூறியுள்ளார்

ஆன்லைன் வகுப்புகள்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் 07.06.2021 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிகிறார்கள். மாணவர்களுக்கு வகுப்புகள் /தேர்வுகள் (ஆன்லைனில்) நடக்கிறது.

மின்தடை அனுமதி
எனவே தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்புப் பணிகளுக்காகக் கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதான் காரணம்
டிசம்பர் 2020 முதல் ஆறு மாத காலமாக எந்தவித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்புப் பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

ஊரங்கிற்கு பின்
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்புப் பணிகள் எவ்விதத் தொய்வுமின்றி விரைந்து எடுத்துக்கொள்ளப்படும் என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்". இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications