Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்துகிறார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமித் ஷாவுடன் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த முறை அதிமுக பாஜக தலைமையில் ஒரு அணியும், திமுக காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தவெக ஆகியவை தனியாக போட்டியிடுகின்றன. ஒட்டுமொத்தமாக நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு அமித்ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Edappadi Palaniswami AIADMK amit shah politics Delhi

விஜய் தனியாக போட்டி

இந்த முறை சட்டசபை தேர்தலில் கடுமையான போட்டி இருக்க போகிறது. அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் கடுமையான சவால் காத்திருக்கிறது. ஏனெனில் கடந்த 2016, 2021 இரண்டு சட்டசபை தேர்தல்களிலுமே, திமுக, அதிமுக இரண்டுமே வெறும் ஒன்றரை முதல் 2 சதவீதம் வாக்குகள் குறைவாக பெற்றதால் ஆட்சி மாறி மாறி பறிகொடுத்தன. 2016ல் திமுகவும், 2021ல் அதிமுகவும் ஆட்சியை பறிகொடுக்க வெறும் 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளின் வித்தியாசம் தான். அதனால் தான் இரு கட்சிகளுமே கூட்டணிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

இது தவிர தவெக என்ற கட்சியை தொடங்கிய விஜய்யும் தனியாக களம் காண்கிறார். அவர் எந்த அளவிற்கு வாக்குகளை பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் கணிசமான இளைஞர்கள் அவரது ஆதரவாளர்களாக இருப்பதால் ஓட்டு மேலும் பிரியும் அபாயமும் உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுகவின் வெற்றியை தவெக பாதிக்கும் என்ற அச்சம் வேட்பாளர்களுக்கு உள்ளது. அதனால் கூட்டணியை பலப்படுத்துவதில் கட்சிகள் ஆர்வம் காட்டின. கூட்டணியும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

திமுக கவனம்

மறுபுறும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தொகுதிகளை இறுதி செய்து, தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த திமுக முடிவெடுத்துள்ளது.

டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகாமல் உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்த வாரம் சென்னை வர இருப்பதாகவும், யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக கேட்கும் தொகுதிகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தரப்பில் 35 தொகுதிகள் வரை கோரப்பட்டதாம். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறதாம். பாஜகவை பொறுத்தவரை சென்னையில் தியாகராயர் நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கத்தை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை கோவை வடக்கு, உதகை, அவிநாசி, திருப்பூர், ஓசூர் தொகுதிகளையும் தென் தமிழகத்தில் நாகர்கோவில், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளையும் பாஜக கேட்கிறதாம். இதில் சில தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாகும். இதனை அதிமுக விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. அமித்ஷா உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் இறுதி முடிவு வெளியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+