"சிவப்பு சிலிண்டர்".. வெல்லம்போல வந்த நியூஸ்.. வருஷத்துக்கு 8 சிலிண்டர்களுக்கு மானியம்.. ஹய்யா ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் எரிவாயு மாற்ற குழு அறிக்கையில், முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன

good news lpg subsidy on cylinders the most important announcement to be released soon

இந்நிலையில், சமையல் கேஸ் புக்கிங், சென்னையில் தலைதூக்கி உள்ளது.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. கடந்த ஜனவரி மாதம் ஈரோட்டில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் கேஸ் நிரப்பும் பணியின்போது ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார்..

அதேபோல திருச்சி இனாம் குளத்தூரில் கேஸ் நிரப்பும் ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 2 பேர் காயமடைந்தனர்... பொதுவாக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதிய சிலிண்டர்கள் மாற்றப்படும். இப்படி மாற்றப்படாத சிலிண்டர்களால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பழைய சிலிண்டர்: எனவே பழைய சிலிண்டர்களையும், துருபிடித்த சிலிண்டர்களையும் மாற்றவும், விபத்துக்களை தவிர்க்கவும், புதிய சிலிண்டர்களை இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அது வந்தவுடன்தான், அதில் கேஸ் நிரப்பி விநியோகம் செய்கிறது. இந்த புதிய சிலிண்டர்கள் வருவதற்கு சற்று கால தாமதம் ஏற்பட்டது.. ஆனால் போதுமான அளவுக்கு புதிய சிலிண்டர்கள் வராததால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.. எனவே, சென்னையில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க பக்கத்து மாநிலங்களில் இருந்து சிலிண்டர் வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கியாஸ் சிலிண்டர் கொண்டு வரப்படுகிறது. தேவைக்கு ஏற்ப தினமும் 100 லாரிகளில் சிலிண்டர் சென்னைக்கு வருகிறது. ஒவ்வொரு லாரியிலும் 366 சிலிண்டர்கள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, மயிலாடுதுறை, மன்னார்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் இருந்தும் தினமும் 124 லாரிகளில் சிலிண்டர்கள் வருகிறது.

முக்கிய அறிவிப்பு: சென்னை நகருக்கு தினமும் 45 ஆயிரம் சிலிண்டர்கள் தேவைப்படுவதால், இதை சரி செய்ய 1.25 லட்சம் சிலிண்டர்கள் கொண்டு வரப்போகிறார்களாம்.. எனவே அடுத்த சில நாட்களில் இந்த நிலைமை முழுமையாக சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது..

அதாவது, இந்தியாவில் பொதுமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 8 எல்பிஜி சிலிண்டர்கள் வரைக்கும் மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் எரிவாயு மாற்ற குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

good news lpg subsidy on cylinders the most important announcement to be released soon

எல்பிஜி இணைப்புகள்: பிரதம மந்திரி உஜ்வாலா திட்டமானது, கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திற்கு முன்பு வரை எடுத்துக் கொண்டால், வருடந்தோறும் 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது, எல்பிஜி சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதால், 8 எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பொது மக்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைப்பதால் அரசு வழங்கும் மானியத் தொகையில் 13 முதல் 15 சதவீதம் வரைக்கும் குறைய வாய்ப்புள்ளது.

சிலிண்டர்கள்: எனவே, ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு ஏழு முதல் எட்டு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் எரிசக்தி மாற்ற குழுவின் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.. மேலும், பொதுமக்களுக்கு சிலிண்டருக்கான மானியம் வழங்குவது குறித்தான அறிவிப்பை கூடிய விரைவில் அரசாங்கம் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+