ஓடும் தொழிலாளர்களுக்கு ரயில்வே குட் நியூஸ்: பிப்ரவரி சம்பளத்தில் கி.மீ. அலவன்ஸ் ஜாக்பாட்
சென்னை: ரயில்வே ஓடும் தொழிலாளர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்துடன் கி.மீ., அலவன்ஸ் வழங்கப்படும் என ரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.. இந்த முடிவின் மூலம் லோகோ பைலட்டுகள் மற்றும் கார்டுகளின் வாழ்வாதாரமும் அவர்களின் நியாயமான வருமானமும் பாதுகாக்கப்படுகிறது.. இது தொழிலாளர்களுக்கு மிகுந்த குஷியை தந்து வருகிறது..
இந்திய ரயில்வேயில் என்ஜின் டிரைவர்கள் அதாவது லோகோ பைலட்டுகள் மற்றும் கார்டுகள் போன்ற பணியாளர்கள் "ஓடும் தொழிலாளர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்..

இவர்களது பணி என்பது சாதாரண அலுவலகப் பணி போன்றது கிடையாது.. ரயில்களை ஓட்டிச் செல்லும் தூரத்தின் அடிப்படையில் இவர்களுக்கு கி.மீ. அலவன்ஸ் எனப்படும் மைலேஜ் படி வழங்கப்படுகிறது..
ரயில்வே தொழிலாளர்கள்
இது அவர்களது ஒட்டுமொத்த வருமானத்தில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது.. நாட்டின் போக்குவரத்து முதுகெலும்பாக விளங்கும் ரயில்களை இரவு பகல் பாராமல் இயக்கும் இந்தத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு இந்த அலவன்ஸ் ஒரு முக்கிய அங்கீகாரமாகும்..
தற்போதைய சூழலில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செலவினக் கணக்குகளை காரணம் காட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தில் வழக்கமான சில அலவன்சுகள் வழங்கப்படாது என்று ஒரு தகவல் வெளியானது.. குறிப்பாக ஓடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கி.மீ. அலவன்ஸும் இதில் நிறுத்தி வைக்கப்படலாம் என்ற சூழல் உருவானது..
ஊதியம், சம்பளம்
இந்தச் செய்தி ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.. தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியப் பலன்கள் குறைக்கப்படுவதால் தொழிலாளர்கள் மிகுந்த கவலையடைந்தனர்..
இந்த இக்கட்டான நிலையில், தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ. இந்த விவகாரத்தில் தலையிட்டது.. அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணையா, ரயில்வே வாரியத்திடம் இது குறித்து விரிவாகப் பேசினார்..
அலவன்ஸ் ரயில்வே வாரியம்
ஓடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மைலேஜ் படியை நிறுத்தினால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ரயில் சேவைகளிலும் தேவையற்ற இடையூறுகளை உருவாக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.. தொழிலாளர்களின் உணர்வுகளையும் பணியின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டி இந்த முடிவை கைவிடக் கோரினார்..
சங்கத்தின் இந்தப் போராட்டத்திற்கும் கோரிக்கைக்கும் தற்போது செம பலன் கிடைத்துள்ளது.. ரயில்வே வாரியம் தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டு, ஓடும் தொழிலாளர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்துடன் வழக்கம்போல கி.மீ. அலவன்ஸ் வழங்கப்படும் என்று தற்போது உறுதி அளித்துள்ளது..
வருமானம் பெரிய நிம்மதி
இது குறித்து மதுரை கோட்ட நிர்வாகிகள் ரபீக் மற்றும் ராம்குமார் ஆகியோர் சொல்லும்போது, தொழிலாளர்களின் நியாயமான வருமானம் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.. அதே சமயம், மற்ற ரயில்வே ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய இரவு நேரப் படி போன்ற பிற அலவன்சுகளையும் முழுமையாகப் பெற்றுத் தர தொடர்ந்து போராடப் போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்..
மொத்தத்தில் இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்துள்ளதோடு, ரயில் சேவைகள் தடையின்றி இயங்குவதையும் உறுதி செய்துள்ளது..
தொழிலாளர்களுக்கு குட் நியூஸ் ஜாக்பாட்
இந்த அலவன்ஸ் வழங்கப்படுவதால் ஓடும் தொழிலாளர்களின் வருமானம் காக்கப்பட்டு, அவர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற வழிவகுக்கிறது.. இது அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது.. அரசுக்கு தொழிலாளர் அதிருப்தியால் ஏற்படக்கூடிய வேலைநிறுத்தம் மற்றும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது..
நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே இணக்கமான சூழல் உருவானதால், நாட்டின் ரயில் போக்குவரத்து தடையின்றி இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது..!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications