ஆ "அவரா".. முழுசா பாஜக பக்கம் சாஞ்சிட்டாரோ.. பீறிட்டு கிளம்பிய பாசம்.. திக்குமுக்காடும் புள்ளிகள்..!

ஐஜேகே பாரிவேந்தர் பாஜகவுக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து கொண்டே வருகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு என்ற வார்த்தையை விட, ஆளுநர் சொன்ன, 'தமிழகம்' என்ற வார்த்தைதான் சரி என்று ஐஜேகி தரப்பு சொல்கிறதாம்.. இதையடுத்து, பாஜகவுக்கான மவுசு மேலும் எகிறி வருவதாக தெரிகிறது.

உதயசூரியன் சின்னத்தில் எம்பியாக இருந்துகொண்டே, திமுகவை சரமாரி விமர்சித்து வருபவர் ஐஜேகே பாரிவேந்தர்.. "குடும்ப ஆட்சி, குடும்ப அரசியல் கூடாது.. பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் குடும்ப அரசியல் ஒழிக்கப்படும்" என்றெல்லாம் பேட்டிகளை தந்து வருபவர்.
அந்தவகையில், வரும் எம்பி தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் ஐஜேகே இடம்பெற வாய்ப்பில்லை என்றும், பாஜக அல்லது அதிமுகவுடன் இணைந்து ஐஜேகே தேர்தலை சந்திக்கக்கூடும் என்றும் தகவல்கள் வலம் வருகின்றன.

டெலிகாஸ்ட்

டெலிகாஸ்ட்

இப்படிப்பட்ட சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் கொந்தளித்து பேட்டி தந்திருந்தார் அண்ணாமலை.. இதில் அதிகம் வறுபட்டது பாரிவேந்தரின் புதிய தலைமுறை டிவி சேனல் செய்தியாளர் ஆவார்.. "நீங்கள் எந்த சேனல்" என்று புதிய தலைமுறை செய்தியாளரை கேட்ட அண்ணாமலை, திமுக அமைச்சர் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டு உள்ளது. வீடியோ ஆதாரத்துடன் உள்ளது, நான் அதை தருகிறேன், நீங்கள் அதை டெலிகாஸ்ட் செய்வீர்களா? என்று கேட்டார். இதனால் எரிச்சலடைந்த புதியதலைமுறை டிவி செய்தியாளர், "ஒவ்வொருமுறையும் நீங்கள் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள் ஆனால் ஆதாரத்தை தர மறுப்பது ஏன்? என்று கேட்டார்.

 சைக்கிளில்

சைக்கிளில்

இந்த கேள்வியால், கொந்தளித்துப்போன அண்ணாமலை, பிஜிஆர் எனர்ஜி குறித்த ஆதாரம் உள்ளது, அதை ஒளிபரப்புவீர்களா? அரை மணி நேரம் ஒளிபரப்பு செய்துவிட்டு, அதற்கு பிறகு என்கிட்ட வந்து கேள்வியை கேட்க வேண்டும். நான் கொடுக்கும் ஆதாரங்களை போடாமல், அந்த கட்சிக்கு ஜால்ரா அடித்து விட்டு இங்கே வந்து கேட்கக்கூடாது... நான் பிஜிஆர் ஆதாரத்தை பிரஸ்மீட்டில் கொடுத்தும் அதை நீங்கள் ஒளிபரப்பு செய்ய வில்லை. சும்மா வந்து கேள்வி கேட்டு கதை விடக்கூடாது. நான் கொடுக்கும் ஆதாரத்தை போடாமல் முதலமைச்சர் டீ குடித்தார், காபி குடித்தார், சைக்கிளில் போகிறார் என்று தானே நியூஸ் போடறீங்க?" என்று புதிய தலைமுறை டிவி மீது சீறியிருந்தார் அண்ணாமலை...

 கழண்டோடும் சக்கரம்

கழண்டோடும் சக்கரம்

விரைவில், பாஜகவுடன் கூட்டணிக்கு பாரிவேந்தர் தயாராகி வரும்நிலையில், அதுவும் அவர்கள் கேட்ட தொகுதியையே ஒதுக்கி தருவதாக பாஜக மேலிடம் உறுதி தந்துள்ளதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், அவர்களின் சொந்த டிவி நிருபரை வைத்தே அண்ணாமலை இப்படி சீறியிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.. ஒருவேளை பாரிவேந்தரை, பாஜக கூட்டணியில் சேர்க்காமல் கழட்டிவிடுவதற்காக இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினாரா அண்ணாமலை? என்றும் சிலர் கிளப்பி விட்டார்கள்.. இந்த சந்தேகங்களுக்கெல்லாம் பாரிவேந்தரே, 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பதிலளித்திருந்தார்.

 ரவி பச்சைமுத்து

ரவி பச்சைமுத்து

பாரிவேந்தர் அப்போது பேசியபோது, "நிருபர்களும் கொஞ்சம் சூழ்நிலையை அனுசரித்து போகணும்.. அண்ணாமலை சின்ன வயசில் பெரிய பதவிக்கு வந்திருக்கிறார்.. அவர் மிகப்பெரிய அறிவாளி.. அவர் இல்லேன்னா, இன்னைக்கு எதிர்க்கட்சியே இல்லாமல் போயிருக்கும்.. கையில் அத்தனை டேட்டாவும் வைத்திருக்கிறார்.. எல்லா வரலாறுகளையும் கையில் வைத்திருக்கிறார்.. ஐபிஎஸ் வரை படிப்பது அவ்வளவு லேசான காரியம் இல்லை.. எந்த கேள்விக்கும் பதில் சொல்கிறார்.. அப்படி அவர் பதில் சொல்லும்போது, நீங்கள் அவரை கேள்வி கேட்கறீங்க?

 ஜே ஜே சத்தம்

ஜே ஜே சத்தம்

அவர் பேட்டி தருகிறார் என்றாலே, இருக்கிற எல்லா சேனல்களும் கிளம்பி வந்துடறீங்க. ஜே ஜே என்று சத்தம் போடறீங்க. அவருக்கு சொந்த கட்சியில் சில பிரச்சனைகள் இருக்கிறது.. அந்த பிரச்சனைகள் காரணமாக, அவர் சிரமத்தில் இருக்கிறார்.. இந்த நேரத்தில் போட்டி போட்டுக் கொண்டு, சில கேள்விகளை கேட்பது என்பது முறைகிடையாது.. தமிழகத்துக்கு தேவையான சிறந்த தலைவர் பாஜகவில் இப்போது இருக்கிறார்.. அதனால் அன்று நடந்த நிகழ்ச்சியை நாங்களே எதிர்பாராமல் நடந்த ஒன்றுதான்" என்று கூறியிருந்தார் பாரிவேந்தர். அதாவது, சொந்த டிவி சேனலின் செய்தியாளரை கடிந்து கொண்டு, அண்ணாமலைக்கு பாராட்டை தெரிவித்திருந்தார்.

செய்தியாளர்

செய்தியாளர்

அதுமட்டுமல்ல, அந்த செய்தியாளரை வேலையை விட்டு தூக்கிவிட்டதாகவும் தகவல்கள் பரவவும், பல்வேறு தரப்பினரிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. பாஜகவுக்கு வெளிப்படையாகவே இவ்வளவு சப்போர்ட் செய்கிறாரே பாரிவேந்தர் என்ற முணுமுணுப்புகளும் அரசியல் களத்தில் எழுந்தன. இந்நிலையில், இன்னொரு தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வருகிறது.. தற்போது நிலவிவரும் "தமிழ்நாடு" பெயர் விவகாரத்திலும், "தமிழகம்" என்பதுதான் சரி, தமிழ்நாடு என்பது பிரிவினைவாதிகளின் சொல் என்று ஐஜேகே வட்டாரத்துக்கே இன்னொரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறாராம் பாரிவேந்தர்.

 இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

திடீரென பாஜக மீது பாசம் அதிகரித்து வருவதற்கும், திமுக கூட்டணியில் இருந்து கழண்டுக்கொண்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து, அக்கட்சியை தாங்கி பிடிப்பதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள தங்களது கல்லூரிகளை சிக்கலின்றி நடத்தி செல்வதற்கு, பாஜகவின் தயவு மட்டுமே தேவையாக உள்ளதாம்.. அதனால்தான் தமிழக அரசியலையும் தாண்டி, மத்திய பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாம் பாரிவேந்தர் தரப்பு.. இந்த முடிவு கடந்த வருடமே எடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்..

பாரிவேந்தர்

பாரிவேந்தர்

அதனால்தான், உள்ளாட்சித் தேர்தலிலேயே இந்திய ஜனநாயக கட்சி, திமுகவின் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட்டதாக கூறப்படுகிறது.. இருந்தாலும்.. தமிழ்நாட்டில் மக்களின் உணர்வுகளுக்கு மாறாக பல விவகாரங்களிலும் பாஜகவுக்கு அதீதமாக அவர் ஆதரவளிப்பது ஐஜேகே ஆதரவாளர்களையை திகைக்க வைத்து வருகிறதாம்.. தமிழ்நாட்டு மக்களின் 'பல்ஸ்' என்னவென்றுகூட அறியாமல், இப்படி சொல்கிறாரா பாரிவேந்தர் என்ற ஆதங்கமும் வெடித்து கிளம்பி உள்ளதாம்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+