சிலிண்டருக்கு குட்பாய்.. சென்னையில் முதல்முறையாக.. வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. முழு விவரம்
சென்னை: வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் வழங்கும் நடைமுறை சென்னையில் முதல்முறையாக வந்துள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு ஒன்றில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் சென்னையில் முதல்முறையாக எப்படி செயல்படுத்தப்படுகிறது. இதற்கு மீட்டர் எப்படி பொறுத்துகிறார்கள், கட்டணம் எப்படி வசூலிப்பார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

இப்போது வீடுகளுக்கு கேஸ் என்பது சிலிண்டர் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த கேஸை குழாய் வழியாக வழங்கும் நடைமுறையை அமல்படுத்தினால் இறக்குமதி செலவு குறையும். இயற்கை எரிவாயு பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரிக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய அரசு இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத் வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
இதன்படியே பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில், திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் துறைமுகத்தில் எல்என்ஜி எனப்படும் திரவ நிலை எரிவாயு முனையத்தை அமைத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் எரிவாயு இந்த முனையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
முதறகட்டமாக தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசுடன் டோரன்ட் கேஸ் (torrent gas) நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. ஏற்கனவே இயற்கை எரிவாயு குழாய் மூலம் விநியோகிக்கும் திட்டம் நாகப்பட்டினம், காரைக்கால், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பயன்பாட்டில் இருக்கிறது.
சென்னையில் முதல்முறையாக வீட்டு உபயோக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அண்ணா நகரில் உள்ள மெட்ரோ சோன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குழாய் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயு குழாய் எப்படி அமைக்கப்படும்: வீட்டுக்கு வீடு மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பது போன்று எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும். அங்கிருந்து சமையலறைக்கு நேரடியாக இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயு மாதம் பில் எவ்வளவு : இயற்கை எரிவாயு பயன்பாட்டை அளவிட தனி மீட்டர் பொருத்தப்படுகிறது. எப்படி மின் கட்டணத்திற்கு மீட்டர் பொறுத்தப்படுகிறதோ, அதுபோல் இயற்கை எரிவாயு பயன்படுத்தவும் மீட்டர் பொறுத்தப்படுகிறது. இதனடிப்படையில் நுகர்வோருக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இணைய வழியில் கட்டணம் செலுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயு இணைப்பு பெற வீடுகளுக்கு எவ்வளவு கட்டணம்: வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பை பெற 7,090 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் 6,500 ரூபாய் திரும்ப பெறும் கட்டணம் என்று ரோடன்ட் கேஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் சென்னையில் அடுத்தகட்டமாக அரும்பாக்கம், கோயம்பேடு, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த திட்டம் எதிர்காலத்தில் சென்னை முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
பைப் கேஸ் சிக்கல்கள் என்ன: அதேநேரம் இந்த திட்டத்தில் சில சிக்கலும் உள்ளது. எங்காவது பிரச்சனை ஏற்பட்டால் இயற்கை எரிவாயு தடை படலாம். மின் கேபிள்கள் போல், குடிநீர் கேபிள்கள் போல் அமைக்கப்படும் என்பதால் சில சிறிய அளவில் பிரச்சனைகளும் வரலாம். அது எப்படி இருக்கும் என்பது நடைமுறைக்கு வந்த பின்னரே தெரியும்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications