அரசு கல்லூரிகளில் சேர செம ‘சான்ஸ்’.. மிஸ் பண்ணிடாதீங்க.. கால அவகாசத்தை நீட்டித்த உயர்கல்வித்துறை!
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர செப்டம்பர் 14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் கல்லூரிகளில் நடத்தப்பட்டது.

இருப்பினும், சில அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் இன்னும் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று முதல் (செப்டம்பர் 12) செப்டம்பர் 14ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
கல்லூரிகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் TNGASA 2023-UG VACANCY என்ற தொகுப்பில் காணலாம் என உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார். எனவே, மாணவர்கள் இந்த சூப்பரான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications