தாசில்தார் கடிதம் தந்தும் முடியாத வேலை.. சென்னை அருகே அசிங்கப்பட்ட அரசு ஊழியர்.. சிக்கியது எப்படி?
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலம் விவசாயி ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.இந்நிலையில் ஏரியில் வண்டல் மண் எடுக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நீர்வளத்துறை என்ஜினியர் ரமேஷ் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகா ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தை சேர்ந்த 52 வயதாகும் ரமேஷ் என்பவர், தனது 4 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டார். அதற்காக ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலம் ஆர்.கே.பேட்டை வருவாய் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து ரமேஷ்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரியில் வண்டல் மண் எடுக்க ஆர்.கே.பேட்டை தாசில்தார் அனுமதி கடிதம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது..

அதேநேரம் குறிப்பிட்ட ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பட்டில் உள்ள ஏரி ஆகும். எனவே மண் எடுக்க வேண்டிய இடத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து தர வேண்டியது அவசியம் ஆகும். இதன் காரணமாக ரமேஷ் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அனுமதி கடிதத்தை பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.
இந்த நிலையில் நீர்வளத்துறையில் உதவி என்ஜினியராக பணியாற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கணபதி நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 50) என்பவர் ஏரியில் மண் எடுக்க வேண்டிய பகுதியை அளவீடு செய்து கொடுக்க விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரமேஷ் திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின் பேரில், ரமேஷ் ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரத்தை உதவி என்ஜினியர் ரமேஷிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரமேஷை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதை தொடர்ந்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் என்ஜினியர் ரமேஷை கைது செய்தார்கள். பின்னர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாலை 4 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8 மணி வரை நீடித்தது. பின்னர் அவரை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications