Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு.. டிரான்ஸ்பர் கேட்டு யாரும் என்கிட்ட வராதீங்க.. தமிழக அமைச்சர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:''பணியிட மாறுதல் கேட்டு யாரும் என் வீட்டுக்கு வர வேண்டாம்.. அப்படி வருவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், 946 மருந்தாளுனர்கள், 553 உதவியாளர் பணியிடங்கள், ஐந்து தொழில் வழிகாட்டி ஆலோசகர் உட்பட மொத்தம் 1,474 பேருக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Government Employees

பணி நியமனம்: இதற்கு பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அவரவர் சொந்த பகுதிகளிலேயே, பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது கொள்கை. அப்போது தான், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள்..

ஒருவேளை அவர்களது சொந்த ஊர்களில் காலியிடம் இல்லாத பட்சத்தில் குறிப்பிடட காலத்துக்கு பிற இடங்களுக்கு பணி நியமனம் பெற்று செல்ல வேண்டும். ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல், ஆனால், அதிகாலை 5:00 மணிக்கு பணியிட மாறுதல் வேண்டி, என் வீட்டுக்கு வந்து காத்திருக்கிறார்கள்.. இடமாறுதல்கள் துறை தலைவர்கள் வாயிலாக தான் மேற்கொள்ளப்படும் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது..

டிரான்ஸ்பர்: இடமாற்றம் தொடர்பாக, யாரும் என்னை சந்திக்க வரக்கூடாது என்று என்னுடைய அலுவலகத்தில் அறிவிப்பு பலகையே வைத்து விட்டேன். அதையும் மீறி, எனக்கு தெரிந்த யாரையாவது அழைத்துக்கொண்டு நிறைய பேர் வருகிறார்கள்.

இங்கே பணி நியமன ஆணை பெற்றவர்கள் வந்திருக்கிறீர்கள். எனக்கு தெரிந்தவர்களை அழைத்துக்கொண்டு வந்து எனக்கு நெருக்கடி கொடுப்பது நியாயமா என்பதை சிந்தித்து பாருங்கள்... மருத்துவ துறை பணியாளர் காலியிடங்கள், 90 சதவீதம் நிரப்பப்பட்ட பிறகு, கலந்தாய்வு நடத்தி விரும்பிய இடங்களுக்கு செல்ல வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

சுகாதாரத்துறையில் உள்ள பலவேறு இயக்குநர்களிடம் காலிப்பணியிட விவரம் கோரப்பட்டுள்ளது. அதன்பேரில் கலந்தாய்வு நடத்தி விருப்பமான இடக்ளுக்கு செல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம்.

நெருக்கடி: ஆனால், அதற்கு முன்பு, டிரான்ஸ்பர் வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தால், "17பி" போன்ற துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 5,670 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.. 36,465 பேருக்கு வெளிப்படையான கலந்தாய்வும் நடத்தப்பட்டுள்ளது..

1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நீதிமன்றங்களில் அது தொடர்பாக 38 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை தாக்கல் செய்தவர்கள் அதனை முடித்துவிட்டால், 1066 பேருக்கு வாழ்க்கை கிடைக்கும்..

பிரச்சனைகள்: இதே நிலைமைதான் 2259 கிராம சுகாதார செவிலியர்களுக்கு கிடைக்கும்.. அதனால், எதற்கெடுத்தாலும் கோர்ட்டுக்கு போகாமல், துறை ரீதியான அதிகாரிகளை சந்தித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அவர முயற்சி செய்வார்.. நடப்பாண்டில் 2553 மருத்துவர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தேர்வுகள் நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார் அமைச்சர் மா.சு. சுப்பிரமணியன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+