அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. தமிழக ஆசிரியர்களுக்கும் குட்நியூஸ்.. எல்லா வசதியும் இதுல இருக்கா? செம
சென்னை: அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கட்டாயமாக ஒவ்வொரு மாதமும், வருமான வரி பிடித்தம் செய்யும் புது நடைமுறையாக உள்ளது.. விருப்பம் போல வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு கைவிடுகிறது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியப்பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருளான "ஐஎப்எச்ஆர்எம்எஸ்" என்ற நிதித்துறையின் சாஃப்ட்வேர் வாயிலாக தயாரிக்கப்பட்டு, அதன்படியே வழங்கப்பட்டும் வருகிறது..
புதிய சாப்ட்வேர் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தியே, இந்த வருடம் முதல் வருமான வரிப்பிடித்தமும் கணக்கிடப்படுகிறது.. அத்துடன் சம்பள பிடித்தமும் செய்யப்படுகிறது.. ஆனால், சமீபத்தில், இந்த IFHRMS சாப்ட்வேர் மூலம் தயாரிக்கப்பட்ட சம்பளப் பட்டியலில், அதிகளவில் வருமான வரிப்பிடித்தம் செய்யும் வகையில் தொகை குறிப்பிடப்பட்டிருந்ததாம். குறிப்பாக, மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் வரியை பிடித்தம் செய்யும் வகையில் அந்த சாப்ட்வேரில் கணக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.
எனவே, இதுகுறித்து தலைமை செயலக சங்கம் சார்பில் தமிழக நிதித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் இது தொடர்பாக மனு தரப்பட்டது.. இதனிடையே, புதிய மென்பொருள் வழியே வருமான வரி பிடித்தம் செய்வதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் தலைமை செயலக சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வைப்பு நிதி: இது ஒருபக்கமிருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் 2023 - 24ம் வருடத்துக்கான பொது வருங்கால வைப்பு நிதி விபரத்தை அறிந்து கொள்ள இணையதளம் வசதி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதுநிலை மாநில கணக்காயர் கார்த்திக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், "தமிழக அரசு பணி நிலை சார்ந்த, அனைத்து மத்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரின், 2023 - 24ம் ஆண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி, வருடாந்திர கணக்கு விபர அறிக்கை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
டவுன்லோடு: மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தின், http://cag.gov.in/ae/tamilnadu/en இணையதளத்தில், அதிகாரிகள், சந்தாதாரர்கள் தங்களின் கணக்கு விபர அறிக்கையை, "online services - want to know your GPF status"ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" எனறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications