சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சத்துணவு கிடைக்காத மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் வரை அரிசி, பருப்பு கொடுங்க - தமிழக அரசு உத்தரவு

கொரோனா பாதிப்பு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் சத்துணவு திட்ட மாணவ

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை உலர் உணவுத் திட்டத்தை தொடர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடுமுழுவதும் பள்ளி கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மார்ச் 24ஆம் தேதி முதல் கடந்த 5 மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவை மட்டுமே நம்பியிருக்கும் பல மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் தவித்து வருகின்றனர். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எந்த அறிவிப்பும் உறுதியாக கூற முடியவில்லை.

Government of Tamil Nadu orders to give rice and pulses to students till schools reopen

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் பல பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தொலைக்காட்சிகள் மூலமாகவும் வீடியோவாக பாடங்கள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்துக்கு பீக் வந்தாச்சாம்.. இந்தியாவுக்கு எப்ப வரும்.. எஸ்பிஐ நடத்திய அதிரடி சர்வே!தமிழகத்துக்கு பீக் வந்தாச்சாம்.. இந்தியாவுக்கு எப்ப வரும்.. எஸ்பிஐ நடத்திய அதிரடி சர்வே!

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு இந்த சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை உலர் உணவுத் திட்டத்தை தொடர தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

English summary
The government has ordered the provision of dry food items instead of lunch to school children An order has been issued to continue the dry food program in Tamil Nadu until normal life returns. The government has said it will continue to provide dry rations, including rice and pulses, to students under the nutrition program until schools reopen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X