ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடுகிறோம்: தமிழக அரசு
சென்னை: முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கான ரூ.68 கோடி டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ.68 கோடி டெபாசிட் செய்தது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகையை தமிழக அரசு செலுத்தியுள்ளது. ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியையும் தமிழக அரசு வழங்கியது.

இதை எதிர்த்து ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தீபக், தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது எனவும், இல்லத்தை கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை எனக்கூறினர். மேலும் அதிமுக வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில் சென்னை ஆறாவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் தாக்கலான மனுவில் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும்,கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் கூறப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், வருமானவரித்துறையின் சார்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் வழக்கை பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
-
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே!












Click it and Unblock the Notifications