Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தடுத்து அதிரடி.. தமிழ்நாட்டில் மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வு துறையின் ஆணையர் ஜெயகாந்தன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அரசு உயர் அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் உள்துறை செயலாளராக இருந்த அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் உள்பட அரசின் உயர் அதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.

Tamil Nadu IAS officers Stalin

இந்த நிலையில் மேலும் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:-

* முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வு துறையின் ஆணையர் ஜெயகாந்தன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம்.

* ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமனம்.

* மீன்வளத்துறை மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி கெஜலட்சுமி பணியிட மாற்றம்.

* இந்து அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக மாற்றம்.

* இந்து அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம்.

* கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், இந்து அறநிலையத்துறை ஆணையராக மாற்றம்.

* நெல்லை மாநகராட்சி ஆணையர் தாகரே சுபம், வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம்.

*டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அதிஷ் குமார் நியமனம்.

* புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலன் திட்ட இயக்குநராக மாற்றம்.

* நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், குழந்தைகள் நலன் திட்ட இயக்குநராக மாற்றம்.

* கடலூர் ஆட்சியர் அருண் தம்பு ராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* சமூக சீர்திருத்த துறை செயலாளராக இருந்த ஆப்ரஹாம் தொழில்நுட்ப கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* போக்குவரத்த்து துறை ஆணையராக இருந்த சண்முகசுந்தரம் கைத்தறித்துறை இயக்குனராக மாற்றம்.

* போக்குவரத்து துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி கஞ்சோங்கம் ஜடக் சிரு நியமனம்.

* ஊரக வளர்ச்சி துறை இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி சரண்யா நியமனம்.

* கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஐஏஎஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் பணியிட மாற்றம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+