இளைஞர்களே தமிழக அரசின் கடன் உதவி வேண்டுமா? ரூ.3.75 லட்சம் வரை மானியம் கிடைக்கும்
சென்னை: சென்னையில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை வழங்கப்படும் கடனில் ரூ.3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.
தமிழக அரசு ஆதிதிராடவிடர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு பல்வேறு தொழில் தொடங்க கடன் உதவி அளித்து வருகிறது. அந்த கடன்களுக்கு மானியமும் அளிக்கிறது. உதாரணமாக 5 லட்சம் கடன் வாங்கினால் அதில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டத்தேவையில்லை. அதனை மானியமாக அரசு வழங்குகிறது.

இப்படி பல்வேறு கடன் உதவிகளை பட்டியல் இனத்தவர்கள் தொழில் தொடங்குவதற்காக தமிழக அரசு வழங்கி வருகிறது. எனவே தாட்கோவில் சென்று உங்கள் ஊரில் என்ன மாதிரியான தொழில் தொடங்க கடன் தருகிறார்கள். அந்த கடன் பெற என்ன தகுதி வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை கேளுங்கள். அதன்படி கடன் வாங்கி தொழில் தொடங்கி முன்னேறலாம். கடனுக்கான வட்டி விகிதமும் மிக குறைவு தான்.
பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுவது குறித்து தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பினை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பாரம்பரியமான பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம்.
மானியம் எப்படி: இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ.2.00 லட்சம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.
சிறப்பு தள்ளுபடி: விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும் . இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
3.75 லட்சம் ரூபாய்: இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30% அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் , பழங்குடியினருக்கு 50% அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளி 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கியில் கடனுதவியாக பெற்றுக் கொள்ளலாம்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடன் பெற்று தொழில் தொடங்கி முன்னேறலாம்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications