ஒன்பதாவது திருமணத்துக்கு ரெடியான அரசு பள்ளி ஆசிரியை.. அசிங்கமாக டீக்கடையில் சிக்கி? யாரந்த ஆபீசர்
சென்னை: இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே, ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.. புதுபுது செயலிகளை பயன்படுத்தி, புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. அதேபோல, திருமண மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதற்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கில்லை. இதில் பெரும்பாலும் மோசடிகளுக்கு ஆளாவது தொழிலதிபர்களாகவே இருப்பது கவலையை தந்து வருகிறது. என்ன நடந்தது மகாராஷ்டிராவில்? யாரிந்த பெண் சமீரா ஃபாத்திமா?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சமீரா பாத்திமா. பள்ளி ஆசிரியையான இவருக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன..

சின்ன வயதிலிருந்தே தான் அழகாக இருக்கிறோம் என்ற மமதை கொண்டவராம்.. இதே மமதையால், தன்னுடைய கணவரையும் விவாகரத்து செய்துவிட்டார்..
அழகான பெண் சமீரா
பிறகு 2வது திருமணம் செய்ய முடிவெடுத்து, சோஷியல் மீடியாவை பயன்படுத்த துவங்கினார்.. அதில் தன்னுடன் பழகும் பணக்கார ஆண்களிடம், வீட்டு விஷயங்களையும், கஷ்டங்களையும் சொல்லி ஆறுதல் தேடிக்கொள்வாராம்.. பிறகு அவர்களிடம் நெருங்கி பழகி, காதல் வலையில் விழவைத்து, திருமணம் செய்யும் நிலைமைக்கு கொண்டுவந்துவிடுவாராம்.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, வேண்டுமென்றே பிரச்சனையை கிளம்பி, தன்னை கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் தந்துவிடுவேன் என்று மிரட்டி பணத்தை பறிந்துவிடுவாராம்.. ரிசர்வ் வங்கி ஆபீசர் முதல் யாரையுமே இந்த பெண் விட்டுவைத்ததில்லை.. குறிப்பாக, முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பணக்காரர்களுக்கு குறிவைத்து ஏமாற்றி வந்துள்ளார்.
9வது திருமணம்
அந்தவகையில், இதுவரை 8 பேரை திருமணம் செய்து, 9வது திருமணத்துக்கும் முயற்சி செய்து வந்துள்ளார.. இதற்குள் மேற்கண்ட 8 நபர்களில, சமீராவிடம் ரூ.50 லட்சம், 15 லட்சம் இழந்த 2 பேர் போலீசில் புகார் தரவும், சமீரா திடீரென தலைமறைவானார்.. பிறகு நீண்டநாள் மறைந்து வாழ்ந்த நிலையில்தான், 9வது திருமணத்துக்கு முயற்சித்துள்ளார்.. அப்போதுதான், போலீசாரிடம், சிக்கினார் சமீதா.
தற்போது போலீஸ் பிடியிலுள்ள சமீராவிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பாலியல் புகார்கள்
நாக்பூரில் அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார் சமீரா.. ஏற்கனவே 12 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறதாம்.. யாரை திருமணம் செய்தாலும், சில நாட்களிலேயே குடும்ப வன்முறைக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் போலியாக தயார் செய்வாராம்.. பிறகு பாலியல் புகார்களை கணவர் மீது வலுக்கட்டாயமாக திணிப்பாராம். இதன்மூலம் வெடிக்கும் தகராறுகள், வாக்குவாதங்களையும் ஆதாரங்களாக வைத்து, போலீசில் புகார் தரப்போவதாக சொல்வாராம்.
திருமணம் செய்துள்ளவர்கள் அனைவருமே பணக்காரர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதால், குடும்ப மானமே போயவிடும் என்று நினைத்து, சமீரா கேட்ட பணத்தையும், வீட்டிலுள்ள நகைகளையும் தந்துவிடுவார்களாம்..
புனையப்பட்ட அனுதாப கதைகள்
சோஷியல் மீடியாவில் அறிமுகமாகி பழகும்போது, விவாகரத்து பெற்ற பெண்ணாகவும், குழந்தை இருப்பதாகவும் சொல்லியே அத்தனை ஆண்களிடமும் அனுதாபத்தை உருவாக்கியிருக்கிறார்.. அவர்களது நம்பிக்கையை பெறும்வரை, புனையப்பட்ட கதைகளை சொல்லி கொண்டேயிருப்பாராம் சமீரா.. அதற்கு பிறகே, உச்சக்கடட பரிதாபத்தில் சமீராவை திருமணம் செய்ய பணக்கார ஆண்கள் சம்மதம் சொல்லியுள்ளனர்..
அதற்கு பிறகே சட்டரீதியாக புகார் தரப்போவதாக சொல்லி அத்தனை பேரையும் மிரட்டியிருக்கிறார்.. இப்படி ஆண்களை மிரட்டுவதற்காகவே, ஒரு மோசடி கும்பலையும் சமீரா ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்துள்ளார் சமீரா. மொத்தம் 8 ஆண்களிடம் கோடிக்கணக்கான பணத்தை சமீரா சுருட்டியதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுவதால், அதுகுறித்த விசாரணையும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications