பெரிய நிவாரணம்.. நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு.. மனசை குளிர வச்சிட்டாங்களே
சென்னை: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வரி செலுத்துவோருக்கு டிடிஎஸ்/டிசிஎஸ் பிடித்தம் தொடர்பாக அரசாங்கம் பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. PAN (நிரந்தர கணக்கு எண்) செயலிழக்கச் செய்வது தொடர்பாக புதிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை நேற்று இரவு வெளியிட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் தொடர்பாக நாடு முழுக்க உள்ள தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை மெசேஜ் ஒன்று சென்றுள்ளது.

தவறான வருமான வரி கணக்கு மற்றும் விலங்குகளை பெறும் வகையில் வருமான வரிக் கணக்கு ரிட்டர்னை தாக்கல் செய்ய கூடாது என்று வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான தாக்கலில் தவறான தகவல்களை கொடுக்க கூடாது என்று மத்திய நிதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய நடத்தை மிக தவறானது. கடுமையான விளைவுகளை பணியாளர்கள் இதன் மூலம் சந்திக்க நேரிடும். இது பெரிய அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைக்கு கூட வழிவகுக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

எப்போது பலன் கிடைக்கும்?: இப்படிப்பட்ட நிலையில்தான் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வரி செலுத்துவோருக்கு டிடிஎஸ்/டிசிஎஸ் பிடித்தம் தொடர்பாக அரசாங்கம் பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. PAN (நிரந்தர கணக்கு எண்) செயலிழக்கச் செய்வது தொடர்பாக புதிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை நேற்று இரவு வெளியிட்டுள்ளது.
அதன்படி வருமான வரி செலுத்துபவர்களுக்கு பான் எண் செயல்படாத பட்சத்தில், இருமடங்கு வரியைக் கழிக்க வேண்டும் என்று முன்பு விதி இருந்தது. இந்த இருமடங்கு வரி விதிப்பிற்கு இந்த மாதம் வரை விலக்கு அளிக்கப்பட்டது. இப்போது இது அடுத்த வருடம் மே 31 மாதம் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இரட்டைப் பிடித்தம் இல்லை என்ற விதி தொடர்ந்து அமலில் இருக்கும். பான் செயல்படாத பட்சத்தில் இருமடங்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வருமான வரி: இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் எல்லோரும் வருமான வரி செலுத்த வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஜூன் - ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு வருடமும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய அவகாசம், நேரம் கொடுக்கப்படும். இந்த வருடம் ஜூலை 31 வருமான வரி செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய நேரம் கொடுக்கப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வருடம் இதில் 1 கோடி என்ற எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டு உள்ளது. அதாவது 6.91 கோடிக்கும் அதிகமான ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்தனர். இதனால் அவர்களுக்கு கொஞ்சம் தாமதமாக நேரம் எடுத்து ரீபண்ட் செல்கிறது. அதில் நேற்று முதல்நாள் பலருக்கும் பணம் ரிபண்ட் கொடுப்பதற்கான இன்டிமேஷன் சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications