தமிழ்நாடு முன்னேற கூடாது என்று.. வேண்டுமென்றே ஆளுநர் ரவி பேசுகிறார்! ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: முதலீட்டாளர்களிடையே தமிழ்நாடு பற்றி தவறான எண்ணத்தை உருவாக்க ஆளுநர் முயற்சி செய்கிறார். தமிழ்நாட்டிற்கு எந்த விதமான நிறுவனங்களும் வரக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என் ரவி நினைக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார்.

ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதற்கு அழைப்பு விடுப்பதற்காக அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அவர் முக்கிய சந்திப்புகளை நடத்தினார். அங்கே அரசியல் தலைவர்கள், பல்வேறு நிறுவன சிஇஓக்கள், அங்கே வசிக்கும் தமிழர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021. தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021. தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022, தமிழ்நாடு விண்வெளி & பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022. தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை 2023
மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புதிட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை குறித்து இந்த பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் சர்வதேச நிறுவனங்களுடன் ஆலோசனை செய்தார்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்க முயன்ற நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அது தொடர்பாக விமர்சனம் வைத்து இருந்தார். அவர் தனது பேச்சில், நல்ல மனித வளத்தைத் தமிழகம் உருவாக்கினால் மட்டுமே அன்னிய முதலீடுகள் வரும். நாம் கேட்பதாலோ தொழிலதிபர்களைச் சந்திப்பதாலோ முதலீடுகள் வந்துவிடாது.. முதலீடு செய்வோர் தங்களுக்கு லாபம் வர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள். ஒரு டாலர் முதலீடு செய்தால், குறைந்தது 1.5 டாலர் லாபம் வர வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும், என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஆளுநரின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தி இந்து ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாடு பற்றி தவறான எண்ணத்தை உருவாக்க ஆளுநர் முயற்சி செய்கிறார். தமிழ்நாடு வளர கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுகிறார்.

முதலீட்டாளர்களிடையே தமிழ்நாடு பற்றி தவறான எண்ணத்தை உருவாக்க ஆளுநர் முயற்சி செய்கிறார். தமிழ்நாட்டிற்கு எந்த விதமான நிறுவனங்களும் வரக்கூடாது என்று அவர் நினைக்கிறார்.
தமிழ்நாடு முதலீடை பெறக்கூடாது என்று ஆளுநர் நினைக்கிறார். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறக்கூடாது என ஆளுநர் நினைக்கிறார். நான் ஜப்பானுக்கு முதலீட்டை ஈர்க்க சென்ற நேரம் பார்த்து பயணங்கள் மூலம் முதலீட்டை ஈர்க்க முடியாது என்று பேசுகிறார் ஆளுநர் ரவி.
இதன் அர்த்தம் என்ன? தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் வரவே கூடாது என்பதில் ஆளுநர் ஆர். என் ரவி தீர்க்கமாக இருக்கிறார். தனக்கு எந்த பவரும் இல்லை என்று ஆளுநருக்கு தெரியும் ஆனாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ஏதாவது செய்ய வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications