அய்யா வைகுண்டர் போட்ட 10 கட்டளைகள்.. ஹோமம் வளர்க்க கூடாது என்ற அவரா சனாதனவாதி?
சென்னை: ஆர்.என்.ரவி ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று அய்யாவைக்குண்டம் வழியைப் பின்பற்றி வரும் பால பிரஜாபதி தெரிவித்துள்ளார்.
அய்யாவைக்குண்டரின் 192வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் நேற்று ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டார். அப்போது அவர் சனாதனத்தைக் காக்க அவதாரம் எடுத்தவர் வைகுண்டர் என்றும் பள்ளிப்படிப்பைக் கூட சரியாக முடிக்காதவர் ராபர்ட் கால்டுவெல் என்றும் சர்ச்சையைக் கிளப்பும் விதம் பேசி இருந்தார்.

அவரது பேச்சு எதிர்பார்த்ததைப் போலவே சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆளுநர் பேச்சு குறித்து பால பிரஜாபதி, "அய்யாவைக்குண்டர் மனுதர்மத்திற்கு எதிராகப் போர் குரல் கொடுத்தவர். அந்த மனுதர்மத்தை ஏற்றிருந்த அரசுதான் அய்யாவைக் கொடுமைப்படுத்தியது, சிறைப்படுத்தியது. 800 ஆண்டுகள் முன்னாள் உள்ள வரலாற்றைச் சரியாகப் படிக்க வேண்டும்.
வரலாறு தெரியாமல் யாரும் வாய் திறக்கக் கூடாது. அய்யாவைக்குண்டர் 10 கட்டளைகளைப் போட்டுள்ளார். அய்யா வைக்குண்டரை வழிபடும் மக்களுக்குப் புனஸ்காரம் பூசை இல்லை.
கோயில் இல்லை, குரு பூஜை இல்லை. உருவ வழிபாடு இல்லை. படையல் இல்லை. பலி பாவம் இல்லை. பூ போடும் பழக்கம் இல்லை. ஹோமம் வளர்த்தல் இல்லை. சாதி நிற வேறுபாடு இல்லை. மொழி பேதமில்லை. அது போல ஆண், பெண் பேதம் கூட இல்லை.

அவரைப் போய் சனாதனத்தைக் காப்பாற்ற வந்தவர் என்று சொல்லக் கூடாது. அவர் சனாதனத்தைக் காக்க வரவில்லை. மக்களைக் காக்க வந்தார். மக்களுக்குள் இருந்த மடமையைப் போக்க வந்தார். அறியாமையைப் போக்க வந்தார். அரசிடம் இருந்த ஆதிக்க வெறிகளைப் போக்க வந்தார்.
அது போல மனுதர்ம சாதிய பாகுபாட்டை நீக்க வந்தார். புராணங்கள் புகுத்தப்பட்டுள்ளது என்று வைகுண்ட சாமி சொல்கிறார். எனவே அவை யாவும் பொய்ச் சூடிப் போனவை. எனவே அதை நம்பி இருக்காதீர்கள். ஒரு புதிய சகாப்தத்தைப் படையுங்கள் என்கிறார்.

தெய்வத்தை உங்களுக்குப் பாருங்கள் என்று சொல்லி கண்ணாடி வழிபாட்டை அவர் கையில் எடுத்தார். உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது.
அந்தக் காலத்தில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அரசையே எதிர்த்தவர் அய்யாவைக்குண்ட சாமி. ஆகவே எங்கள் வேலையை யாரும் செய்ய வேண்டாம். ஆளுநர் அவர் வேலையை மட்டும் செய்யட்டும்" என்று பொங்கி எழுந்துள்ளார்.
உண்மையில் வரலாற்றில் இந்த அய்யாவைக்குண்டர் என்பவர் யார்? அவர் செய்த மறுமலர்ச்சி என்ன?

அது பற்றி வரலாற்றுப் பேராசிரியர் கருணானந்தம், "சனாதன இந்து தர்ம ராஜ்ஜியத்தில் வைகுண்டர் போர் குரலை எழுப்பினார் என்று ஆளுநர் ஆர் என் ரவி சொல்கிறார். அப்படி என்றால், அது என்ன போர் குரல்?
சாணார் பெண்கள் தோள் சீலை அணியக்கூடாது என்று இருந்த நடைமுறையை எதிர்த்து அவர் போராடினார். அவர்கள் ஓடு போட்ட வீடுகளில் வசிக்கக் கூடாது என்று இருந்த அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடினார்.

அந்த மக்கள் தங்கம், வெள்ளி ஆகிய ஆபரணங்களை அணியக்கூடாது என்று இருந்த மடமையை எதிர்த்துப் போராடினார்.
அவரது நிழல் பந்தல்கள் எதைக் குறிப்பிடுகின்றன? துவையல் பந்தி எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறது? அனைத்து சாதியினரும் ஒன்றாக எந்தப் பேதமும் பார்க்காமல், ஒன்றாக அமர்ந்து உண்ணவும் குளிக்கவும் துவைக்கவுமான சர்வ ஜாதி ஒற்றுமையைச் சொல்கின்றன. அதைத்தான் அவர் கேட்டார்.

ராபர்ட் கால்டுவெல் படிப்பைப் பற்றி ஆளுநர் பேசுகிறார். அவர் பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர் என்று சொல்கிறார். இந்தியாவில் உள்ள சமஸ்கிருதத்தைவிட, பழமையான, வளமான மொழியாகத் தமிழ்மொழி உள்ளது என்பதை அவர்தான் உலகுக்கு எடுத்துச் சொன்னார். ஆகவே அவர் மீது இவர்களுக்குக் கோபம் வருகிறது" என்கிறார்
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications