ஆளுநர் ரவி சொந்தக்கருத்து.. திருவிளையாடல்கள் மக்கள் நலனுக்கு எதிரானது.. அமைச்சர் ரகுபதி
சென்னை: தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல் சொந்த கருத்துகளை பேசிவிட்டு சென்றுள்ளார் என்றும் சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல் சொந்த கருத்துகளை பேசிவிட்டு சென்றுள்ளார் என்று சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி ஆளுநரை அழைத்து தமிழ்நாடு சட்டமன்றத்தை முதலமைச்சர் கூட்டினார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது என்று அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சட்டசபையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன.
இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.வாழ்க தமிழ்நாடு.. வெல்க பாரதம்.. நன்றி.. ஜெய்ஹிந்த்.. ஜெய் பாரத் என்று தெரிவித்து விட்டு உரைய வாசிக்காமல் புறக்கணித்து விட்டு அமர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதையடுத்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கும் முன்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சபாநாயகர் அப்பாவு, மரபை மீறிய ஆளுநரின் செயல் சரியல்ல. கூட்டத்தொடர் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே அவையின் மரபு. தேசிய கீதம் குறித்த ஆளுநர் கோரிக்கை தொடர்பாக கடந்த ஆண்டே பதில் அளித்துவிட்டோம். அரசு தயாரித்த உரையை படிக்கவேண்டும் என்ற விதியை மீறி கடமையை செய்ய தவறியுள்ளார் ஆளுநர் ரவி.
ஆளுநரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஆளுநர் மனதில் இருப்பதை கூறியுள்ளார், அதுபோல் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒன்றும் உள்ளது. இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது ஒரு பைசா கூட மத்திய அரசு தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் PM CARE FUND-ல் உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ரூ. 50,000 கோடி ரூபாயை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும்.

சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள் என்று தெரிவித்தார் சபாநாயகர் அப்பாவு.
இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் வாசிக்கவில்லை என்றாலும் உரையை முழுவதுமாக பதிவேற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில் அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல் சொந்த கருத்துகளை பேசிவிட்டு சென்றுள்ளார் என்று சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது என்றும் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications