கைகொடுத்த அமைச்சர் சேகர்பாபு! கண்டு கொள்ளாத ஆளுநர் ரவி! மின்னல் வேகத்தில் நேரு பிறந்தநாள் நிகழ்ச்சி!
சென்னை: ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, அமைச்சர் சேகர்பாபுவுக்கு கை கொடுக்க மறுத்ததோடு அவரை கண்டு கொள்ளாமலும் இருந்தார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாளை ஒட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், தாமோ அன்பரசன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொட்டிய மழையிலும் நேரு சிலைக்கு மரியாதை செலுத்த வந்த ஆளுநர் ரவியை அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், தாமோ அன்பரசன், சேகர்பாபு, ஆகியோர் புத்தகங்களை பரிசளித்து வணக்கம் சொல்லி வரவேற்றனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு மட்டும் ஆளுநர் ரவியிடம் கை கொடுத்தார். அமைச்சர் தன்னிடம் கை கொடுப்பதை கண்டுகொள்ளாத ஆளுநர் ரவி, சேகர்பாபுவிற்கு பின்னால் நின்று கொண்டிருந்த துணை மேயர் மகேஷை பார்த்து வணக்கம் சொன்னார்.
அவரைத் தொடர்ந்து வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மவுலானாவை பார்த்து வணக்கம் சொன்ன ஆளுநர் ரவி, கடகடவென நேரு படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டுவிட்டார். இதனிடையே அமைச்சர் சேகர்பாபுவின் முகம் வெளிறிப் போனாலும் அதை அவர் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதனால் தான் மற்ற இரண்டு அமைச்சர்களும் எதுக்குப்பா வம்பு என வணக்கம் வைப்பதோடு நிறுத்திக்கொண்டு ஆளுநருக்கு உஷாராக கை கொடுக்கவில்லை.
ஆளுநர் திமுக இடையேயான உரசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ரவியின் பேச்சுக்களுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மிகக் கடுமையான முறையில் கண்டனங்களை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மழை காரணமாக ஆளுநர் ரவி பங்கேற்ற ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் நிகழ்ச்சி மின்னல் வேகத்தில் நடைபெற்று முடிந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications