முதல்வருக்கு மட்டுமே அதிகாரம்..இலாகா மாற்றம் பற்றி சட்டம் சொல்வது அதுதான்..சபாநாயகர் அப்பாவு
சென்னை: அமைச்சரவையில் யாருக்கு எந்த துறையை ஒதுக்குவது என்ற அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்கத் தேவையில்லை. நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்ச பதவியில் இருக்கக்கூடாதென சட்டத்தில் இல்லை என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதயத்தில் 90 சதவிகித அடைப்பு உள்ளதால் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வகித்த துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்காமல், முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்திற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். பரிந்துரை கடிதத்தில் முதலமைச்சரின் காரணத்தை "Misleading & Incorrect" என ஆளுநர் ஏற்க மறுத்தார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதை ஏன் குறிப்பிடவில்லை என்றும் வினவியிருந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. முதலமைச்சரின் அதிகாரத்தை பறிக்க முயல்வதா என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் கேட்டுள்ள விளக்கம் குறித்து சபாநாயகர் அப்பாவுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று கூறினார். அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது. முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது, சட்டம் அதைத்தான் சொல்கிறது என்றும் தெரிவித்தார்.
முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது தேவையற்றது, தவிர்த்திருக்கலாம். யாருக்கு என்ன துறை என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முதல்வருக்கே உள்ளது. வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்கத் தேவையில்லை. நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாதென சட்டத்தில் இல்லை என்றும் கூறினர். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டால் மட்டுமே அமைச்சரவையில் இருந்து நீக்க முடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications