Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண்டின் முதல் கூட்டத்திலே ஷாக்.. சட்டசபையில் உரையாற்றாமல் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி! வெளியான காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் உரையாற்ற வந்த ஆளுநர் ரவி திடீரென அவையில் உரையாற்றாமல் புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் உரையாற்றாமல் சென்றது சபையை அவமதிக்கும் செயல் என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து நான்காவது ஆண்டாக இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் உரையுடன் 2025 ஆம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

rn ravi chennai 2025

தொடர்ந்து ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவார்கள் அதற்குப் பிறகு நடக்கும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் 2025 எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்து சபாநாயகர் அறிவிப்பார் என கூறப்பட்டது

இந்த நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட ஆளுநரை தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆளுநரை வரவேற்றனர்.

இந்த நிலையில் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஆளுநர் ரவி ஆளுநர் உரையை படிக்காமல் சட்ட சபையை விட்டு வெளியேறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் நிலையில் இந்த முறை நேரலை லிங்க் செய்தியாளர்களுக்கு தரப்படவில்லை. மேலும் செய்தியாளர்கள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது அவைக்குள் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தொடங்கியதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆனால் சட்டசபை தொடங்கும் முன்பும் முடிவடைந்த பின்பும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என ஆளுநர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று கூட்டம் தொடங்கிய போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என ஆளுநர் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதால் அதிருப்தி அடைந்த ஆளுநர் தமிழ்ழ்த்தாய் வாழ்த்து நிறைவடைந்ததும் அவையை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுகவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் ஆளுநர் ரவி தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே வெளியேறினார். அப்போது திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை ஆளுநர் உச்சரிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

2024ஆம் ஆண்டு முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பேசும் போது தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் இசைக்க வேண்டும் என கூறி தனது உரையை முற்றிலும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு சட்டசபை கூட்டத்திற்காக சபாநாயகர் அப்பாவு நேற்று காலை ஆளுநரை நேரில் சந்தித்து சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இன்று கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் ஆளுநர் என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+