ராமரின் புராண கதைகள்.. ராமேஸ்வரம் முதல் ஸ்ரீரங்கம் வரை ஆலய தூய்மைப்பணி.. ஆளுநர் ரவி நெகிழ்ச்சி
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். ராமேஸ்வரத்திலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் தூய்மை பணி செய்துள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.
ஆலயங்களை தூய்மை செய்வது என்பது அற்புதமான சேவை. அந்த பணியை சமீபத்தில் ராமர் ஆலயத்தில் தொடங்கினார் பிரதமர் மோடி. அவரைத் தொடர்ந்து பலரும் ஆலயத்தூய்மை பணியை செய்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி, பகவான் ஸ்ரீராமர் தொடர்புடைய ஆலயங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.

முதல்வர் அவர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்ததோடு அந்த ஆலயத்தின் சிறப்புகளை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை மற்றும் தர்பசயனத்தில் பிரபு ஸ்ரீ ராமர் இருக்கும் ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.
“ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை மற்றும் தர்பசயனத்தில் பிரபு ஸ்ரீ ராமர் இருக்கும் ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். இங்கு தர்பையில் சயன கோலத்தில் ஓய்வெடுத்தபோதுதான் பிரபு ஸ்ரீ ராமர், இலங்கைக்கு… pic.twitter.com/uaD5R41VjL
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 16, 2024
இங்கு தர்பையில் சயன கோலத்தில் ஓய்வெடுத்தபோதுதான் பிரபு ஸ்ரீ ராமர், இலங்கைக்கு பாலத்தை கட்ட முடிவெடுத்தார். இப்பகுதி முழுவதும் ஸ்ரீ ராமரின் புராண கதைகளால் நிரம்பியுள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான பிரபு ஸ்ரீராமர் கோயிலின் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் உள்ளூர் மக்களிடையே முழு அளவிலான உற்சாகம் நிலவுகிறது.
நமது பன்முக மக்கள் மற்றும் இடங்களுக்கு மத்தியில் ஒரே குடும்பம் என்ற தீவிர உணர்ச்சிப் பிணைப்பு, பாரதத்தின் எண்ணத்தையும் அடையாளத்தையும் உருவாக்கி நிலைநிறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
Governor and Lady Governor did darshan and Pooja at the Sri Ramanathaswamy Temple, Rameswaram, prayed for the well being of our brothers and sisters of Tamil Nadu and the glory of Bharat Mata! pic.twitter.com/imeY8uPM3G
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 16, 2024
ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இதனை ராஜ்பவன் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இங்குள்ள புனித சிவலிங்கத்தை பிரபு ஸ்ரீ ராமர் நிறுவி வழிபட்டார்.
ஆளுநர் திரு. ரவி மற்றும் லேடி கவர்னர் திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இங்குள்ள புனித சிவலிங்கத்தை பிரபு ஸ்ரீ ராமர் நிறுவி வழிபட்டார். ஆலய தூய்மைப் பணியில் தாமாக முன்வந்து பங்கேற்ற உள்ளூர்… pic.twitter.com/fhjicCZJeQ
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 16, 2024
ஆலய தூய்மைப் பணியில் தாமாக முன்வந்து பங்கேற்ற உள்ளூர் மக்களின் உற்சாகத்தைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. #ஒரேபாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துடன் நாம் குதூகலிப்போம் என்று பதிவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமரின் குல தெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பிரபு ஸ்ரீ ராமரின் எண்ணற்ற பக்தர்களுடன் அனைவரது நலனுக்காக ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதசுவாமி கோயிலில் வேண்டிக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
“பிரபு ஸ்ரீ ராமரின் எண்ணற்ற பக்தர்களுடன் அனைவரது நலனுக்காக ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதசுவாமி கோயிலில் வேண்டிக்கொண்டேன். கோயில் வளாகத்தில் தூய்மை சேவையில் ஈடுபட்டேன். பகவானிடம் முதல் முறையாக வழங்கப்பட்ட வால்மீகியின் ஆதி சமஸ்கிருத ராமாயணத்துக்குப் பிறகு ஸ்ரீ ராமரின் மிகச்சிறந்த… pic.twitter.com/fAgc5RJR2y
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 17, 2024
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டதோடு அந்த கம்பர் மணி மண்டபத்தின் சிறப்புகளை பதிவிட்டுள்ளார்.
கோயில் வளாகத்தில் தூய்மை சேவையில் ஈடுபட்டேன். பகவானிடம் முதல் முறையாக வழங்கப்பட்ட வால்மீகியின் ஆதி சமஸ்கிருத ராமாயணத்துக்குப் பிறகு ஸ்ரீ ராமரின் மிகச்சிறந்த பக்தர், அறிஞர் மற்றும் புலவரான கம்பர் தமிழில் ராமாயாணத்தை அரங்கேற்றிய கம்பர் மணி மண்டபத்தில் ஸ்ரீ ராம பக்தியின் ஆழத்தை அனுபவித்தேன். இவ்வாறு ஒட்டுமொத்த தேசமும் ராமமயத்தில் திளைப்பது ஒவ்வோர் இந்தியருக்கும் வரலாற்றுபூர்வ தருணமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் தேரெழுந்தூர் தேவாதிராஜன் கோயில் 23 வது திவ்ய தேசம் ஆகும். மூலவர் தேவாதிராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தால் ஆனவர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். இந்த ஊருக்கும் இன்று சென்றுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.
ராமாயண காவியம் எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அவதாரத் தலமாகும். கம்பர், நரசிம்ம அவதாரம் பற்றி இங்குதான் பாடினார். கம்பருக்கும் அவர் மனையாளுக்கும் கோயிலுக்குள் சிலை எழுப்பியுள்ளனர். தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். இங்கு பெருமாள் ருக்மிணி, சத்தியபாமாவுடனும் பசுங்கன்றுகளுடனும், நான்கு திருக்கரங்களுடனும் ஸ்ரீ கிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார்.
"Blessed to be on the holy land Therazhundur where Kambar, one of the greatest devotees of Prabhu Shri Ram, wrote Ramavataram in Tamil, walked and worked. Like every where else in Tamil Nadu this place also is enthused and excited about the coming up magnificent Prabhu Ram Temple… pic.twitter.com/qBto4N7jTS
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 17, 2024
"பிரபு ஸ்ரீராமரின் மிகப்பெரும் பக்தர்களில் ஒருவரான கம்பர், தமிழில் ராமாவதாரம் எழுதி, நடந்து, உழைத்த புண்ணிய பூமியான தேரழுந்தூரில் இருப்பது பாக்கியம். தமிழகத்தில் எங்கும் இருப்பதைப் போலவே இந்த இடமும் பிரம்மாண்டமாக வருவதைக் கண்டு உற்சாகமும், உற்சாகமும் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications