2.13 நிமிட வீடியோ.. குறுக்கே வந்த சனாதன தர்மம்.. தமிழில் பேசி ஆளுநர் ஆர்என் ரவி தீபாவளி வாழ்த்து!
சென்னை: தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 2.13 நிமிடங்கள் தமிழில் பேசி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தமிழ் மொழியில் பேசி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மொத்தம் 2.13 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் ஆளுநர் ஆர்என் ரவி பேசியதாவது:

வணக்கம், ஒளி திருநாளான தீபாவளி திருநாளில் எனது அன்புக்குரிய தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" அல்லது "வசுதெய்வ குடும்பகம்" என்ற நமது சனாதன தத்துவத்தின் இலட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு இது.
உலகெங்கும் உள்ள பாரதவாசிகள் மதம் அல்லது மொழி வேறுபாடின்றி ஒரு குடும்பமாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள். நமது அன்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ‛ஆத்மநிர்பார் பாரத்'தை உருவாக்க நாம் அனைவரும் Vocal for Local ஆக வேண்டும் அறிவுறுத்தி உள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள், பரிசு பொருட்களை வாங்க உறுதிமொழி ஏற்போம். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாத்தூரில் உள்ள பட்டாசு மட்டும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு சென்றோம். நம் தீபாவளியை ஒளிரச்செய்ய பெண் தொழிலாளர்களின் உழைப்பை பார்த்தேன்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வாங்கி அவர்களுக்கு உதவி நன்றியை தெரிவித்து கொள்வோம் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகள். நன்றி'' என தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications