அமைச்சரான டிஆர்பி ராஜா! ஸ்டாலின் முன்பு கைக்குலுக்கி ஆளுநர் ரவி சொன்ன ஒற்றை வார்த்தை!கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்று கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ஆர்என் ரவி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன்பிறகு ஆளுநர் ஆர்என் ரவி, டிஆர்பி ராஜா ஆகியோர் கைக்குலுக்கி கொண்டனர். இந்த வேளையில் ஆளுநர் ஆர்என் ரவி சொன்ன ஒற்றை வார்த்தை அதிக கவனம் பெற்றது.

தமிழ்நாடு முதல்வராக முக ஸ்டாலின் உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவிபிரமாணம் எடுத்து கொண்டனர். அதன்பிறகு சர்ச்சையில் சிக்கிய ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Governor RN Ravi holding the hand of DMK TRP Raja after the ministerial oath and says this

அதன்பிறகு கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டாலின் மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டன.

இதையடுத்து 3வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக திமுக மூத்த தலைவரும், எம்பியுமான டிஆர் பாலுவின் மகன் டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றார்.

Governor RN Ravi holding the hand of DMK TRP Raja after the ministerial oath and says this

சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவான டிஆர்பி ராஜாவுக்கு இன்று ஆளுநர் ஆர்என் ரவி பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதன்பிறகு டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றதற்கான கையெழுத்திட்டார். அதேபோல் ஒப்புதல் அளிக்கும் வகையில் ஆளுநர் ஆர்என் ரவியும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து டிஆர்பி ராஜா, ஆளுநர் ஆர்என் ரவி ஆகியோர் தங்களின் இருக்கைகளில் அமர சென்றார். இந்த வேளையில் ஆளுநர் ஆர்என் ரவி, டிஆர்பி ராஜா ஆகியோர் கைக்குலுக்கி கொண்டனர். அப்போது ஆளுநர் ஆர்என் ரவி ‛Congratulation' என சிரித்தபடி ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு டிஆர்பி ராஜாவும் சிரித்தபடி நன்றி தெரிவித்தார்.

பொதுவாக ஒருவர் அமைச்சராக பொறுப்பு ஏற்றால் அவர்களுக்கு ஆளுநர்கள் வாழ்த்து சொல்வது இயல்பான ஒன்று தான். இருப்பினும் கூட கவனிக்கத்தக்க அம்சமாக இது உள்ளது. ஏனென்றால் சமீப காலமாக தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் இடையே சித்தாந்த ரீதியிலான மோதல் உள்ளது. டிஆர்பி ராஜா உள்பட திமுக எம்எல்ஏக்கள் பலரும் ஆளுநர் ஆர்என் ரவியை முன்பு விமர்சனம் செய்துள்ளனர். மேலும் ஆளுநர் ஆர்என் சில நாட்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழுக்கு ஆர்என் ரவி அளித்த பேட்டியும் சர்ச்சையானது. இந்த வேளையில் இத்தகைய நிகழ்வு நடந்த நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளது தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Governor RN Ravi holding the hand of DMK TRP Raja after the ministerial oath and says this

மேலும் டிஆர்பி ராஜா, ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நல்லுறவையும், நட்புறவையும் வெளிப்படுத்தும் வகையில் மாறி மாறி பூங்கொத்து கொடுத்து கொண்டனர். டெல்லி, தெலங்கானாவில் ஆளுநர், மாநில அரசுக்கு இடையேயான மோதல் இருக்கும் நிலையில் அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்காமல் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் ஆளுநர், தமிழக அரசு இடையே கருத்து மோதல்கள் இருந்தாலும் கூட பொதுவெளியில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் பார்க்கும்போது நாகரீகமாக பழகி கொள்வது அனைவராலும் பாராட்டப்படக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+