"தமிழ்நாட்டை இழிவுபடுத்துவதையே தொழிலாக வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி” - அமைச்சர் ரகுபதி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை இழிவுபடுத்துவதையே ஆளுநர் ஆர்.என். ரவி, தன் தொழிலாகக் கொண்டிருக்கிறார் என்றும், பாஜகவின் ஊதுகுழலாக முழங்கி வருகிறார் என்றும் அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைத்து வருகிறார். அந்தவகையில், "திராவிடம் என்பது கற்பனை. தமிழகத்தில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர். தமிழகத்தில் மொழி சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

governor ravi regupathy dmk

இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழர்களுக்கு எதிராகப் பேசுவதையே வேலையாக ஆளுநர் ரவி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என தவறான தகவலை ஆளுநர் சொல்கிறார். எங்கே போனாலும் தமிழனுக்கு எதிராகப் பேசுவதை கொள்கையாக கொண்டிருக்கக்கூடிய ஒருவர் தான் நம்முடைய ஆளுநரும், மத்திய பாஜகவும். தமிழ்ப்பற்று எங்களுக்கு தெரியாதா என்பார்கள்.

ஆனால், தமிழ் மொழிக்காக அவர்கள் ரூ.150 கோடி தான் ஒதுக்கினார்கள். ஆனால், சமஸ்கிருதத்துக்காக அவர்கள் ரூ.2,500 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். இது தான் தமிழ்ப் பற்றா? இன்றைக்கு மொழிவாரி சிறுபான்மையினர்களுக்கு உரிமை இல்லை என்பதை போல ஒரு வதந்தியையும் ஆளுநர் சொல்லி இருக்கிறார் .

தமிழ்நாட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் அதைப்போல மற்ற மொழிகள் பேசுகின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் எந்தக் குரலும் எழுப்பவில்லை, எந்தக் கூச்சலும் போடவில்லை. நாங்கள் தமிழ்நாட்டில் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் எங்களோடு இருக்கிறது, தமிழர்கள் எங்களோடு இருக்கிறார்கள், நாங்கள் சகோதரர்களாக இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய தெலுங்கு பேசக்கூடியவர்கள், மலையாளம் பேசக்கூடியவர்கள், கன்னடம் பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

எங்களுடைய திராவிட மாடல் அரசு, யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் இன்றைக்கு பேட்டி அளிக்கக்கூடிய ஆளுநர், தான் தமிழ்நாட்டில் இருக்கின்றோம் என்பதை மறந்துவிட்டார். இங்கே இருக்கக்கூடிய மீனவர்களுக்காக நாங்கள் ஒன்றும் செய்யவில்லை போராடவில்லை என்கிறார். மீனவர்கள், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும்போது, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ அல்லது இந்த ஆளுநரோ ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பார்கள் என்று அவர்களால் சொல்ல முடியுமா?

நம்முடைய ஆளுநர், தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்று சொல்கிறார். ஏதோ இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களும் ஒன்றோடு ஒன்று உறவோடு இருப்பது போலவும், தமிழ்நாடு மட்டும் துண்டிக்கப்பட்டுவிட்டது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை தன்னுடைய பேட்டியின் மூலமாக உருவாக்கி இருக்கிறார்.

தமிழ்நாடு, இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களோடும் நல்ல உறவோடு இருக்கிறது என்பதற்கு பல மாநில முதலமைச்சர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிற ஒரு மாநிலம் இந்தியாவிலே இருக்கிறது என்று சொன்னால் அது தமிழ்நாடுதான். ஆனால் ஆளுநர், வீணாக ஒரு பழியை சுமத்துகிறார். சில நாட்கள் பொறுமையாக இருந்த ஆளுநர், இப்போது இப்படியான கருத்துகளை எல்லாம் சொல்லி இருக்கிறார்.

ஒடிசாவில் தேர்தல் நடந்த நேரத்தில் அமித்ஷாவும் மோடியும் அங்கு பிரச்சாரம் செய்கின்ற பொழுது ஒடிசாவை ஒரு தமிழன் ஆள வேண்டுமா? ஒடிசாவின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று தமிழர்களை திருடர்களை போல ஒரு குற்றச்சாட்டு சுமத்தினார்கள். தமிழர்கள் என்ன திருடர்களா? குற்றவாளிகளா? தமிழ்நாடு என்ன குற்றவாளிகள் பிறப்பிடமா?

இப்படி மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டைப் பற்றி பேசிவிட்டு பீகார் தேர்தலில் என்ன சொன்னார்கள்? தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பீகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுற வகையில் இருக்கிறது என்றெல்லாம் பொய்யான கட்டுக்கதைகளை அவர்கள் அவிழ்த்து விட்டார்கள்.

எங்கு போனாலும் தமிழனுக்கு எதிராக பேசுவதை இன்றைக்கு கொள்கையாக கொண்டிருக்கக்கூடியவர்கள்தான் நம்முடைய ஆளுநரும் மத்திய பாஜகவும். இந்தியை வைத்து மலிவான அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தமிழ்நாட்டுக்கு இல்லை " என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+