பெரிய ட்விஸ்ட்.. ஆன்லைன் சூதாட்ட தடை.. 3 நாளைக்கு முன்பே ஒப்புதல்.. உறுதி செய்த ஆளுநர்!
சென்னை: தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளது தொடர்பாக இன்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவி பிரபல ஊடகமான பிபிசியிடம் தெரிவித்திருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்வது அதிகரித்தது. இதையடுத்து இது தற்கொலைகளை தடுக்க, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இயற்றி, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலையும் பெறுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி அனுப்பி வைத்தது.

இந்த அவசரச் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ந் தேதியன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது அந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், ஆளுநர் ஒப்புதல் தராமல் தாமதப்படுத்துவதாக ஆளும் அரசு கருதியது. இதையடுத்து நேரில் ஆளுநரை சந்திக்கவும் தமிழக அரசு தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இந்த சூழலில் நவம்பர் 24 ம் தேதி ஆளுநர் தரப்பில் இருந்து சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசும் அதே மாதம் 25-ம் தேதி அதாவது 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கொடுத்து. ஆனாலும், மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் தாமதப்படுத்தியதோடு, ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டதாக திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
புதிய சட்டம் ஏன்: இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக கடந்த ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், அதற்கு பதிலாக புதிய சட்டத்தை இயற்றுங்கள் என்று நீதிமன்றமே அனுமதி அளித்திருந்த நிலையில், என்னென்ன காரணங்களுக்காக அந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததோ, அதற்கு பதிலாக புதிய சரத்துகளை உள்ளடக்கி புதிய சட்டத்தை இயற்றியதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
மீண்டும் மசோதா: ஆளுநர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதால், மீண்டும் சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்யப்படும் என அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20 தேதி தொடங்கியது. தொடர்ந்து 23-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரின் போது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. பின்னர் மீண்டும் ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: இந்நிலையில் அண்மையில் ஆளுநர் ரவி, மசோதா நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கிறது என்றால் அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்று கூறியதாக செய்திகள் வெளியானது. இதனால் கடும் கோபம் அடைந்த முதல்வர் ஸ்டாலின், இன்று ஆளுநர் தொடர்பான விவகாரத்துக்கு எதிராக இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். ஆளுநர் தொடர்பாக பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதியை தளர்த்துவதற்கான தீர்மானம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 144 உறுப்பினர்கள் ஆதரவுடன் இன்று நிறைவேறியது. மேலும் அதில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மூன்று நாள் முன்பு: சட்டசபையில் இந்தநிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதே தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து தமிழகத்தின்அனைத்துகட்சிகளுமே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதை வரவேற்றுள்ளன.திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ள நேரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக பதிலடி கொடுத்துவருகின்றன. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவி பிரபல ஊடகமான பிபிசியிடம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு முதல் நாளே ஒப்புதல் அளித்துவிட்டதாக ஆளுநர் தெரிவித்திருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்த விஷயம் மூன்று நாட்களாக வெளியே வராதது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளன.இதுபற்றி விரைவில் விளக்கம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக ஆளுநர் தரப்பிலும், அரசு தரப்பிலும் விளக்கம்வர வாய்ப்பு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications