டி.ஆர்.பாலுவை விடுங்க.. மீண்டும் "அக்மார்க் ஆர்எஸ்எஸ்".. எகிறிய திருமாவளவன்.. வழிமறித்த "தாமரைகள்"
திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: "திராவிடன், ஆரியன் என்பது மாயையே.. திராவிடம் என்பது நிலப்பரப்பே. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களை படுகுழியில் தள்ளிய நீதிக்கட்சி என்ற பெயரில் பொய்களை, திரிபுகளை, மோசடிகளை முன்வைத்த கும்பலின் அக்மார்க் தயாரிப்பு தான் திருமாவளவன்" என்று தமிழக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.
மாநில பிரச்சனைகளை கையாளுவது ஆளுநரா? முதல்வரா? மாநில ஆளுநரின் எல்லைகள் எதுவரை என்ற விவகாரம் தற்போதுதான் ஓய்ந்துள்ளது..
Recommended Video
ஒரு மாநிலத்தின் ஆளுநரே என்றாலும், சட்டவிதிகளுக்கு பொருந்தக்கூடியவராகவே இருப்பதே அடிப்படை அம்சம்.. அதனால்தான் ஆளுநரை, "ஹெட் ஆஃப் தி ஸ்டேட்" என்கிறோம்..

பகீர்
எனவேதான், பேரறிவாளன் விவகாரத்தில்கூட, இன்றைய ஆளுநரை கடிந்து கொண்டதுபோல், இதற்கு முன்பு சுப்ரீம்கோர்ட் வேறு எந்த ஆளுநரையும் நேரடியாக, பகிரங்கமாக, குற்றம்சாட்டியது இல்லை.. ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று நீதிபதிகள் இன்று சொல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.. அதேபோல, நீட் விவகாரத்திலும் இப்படித்தான்.. ஆளுநரின் தேநீர் விருந்தை மாநில கட்சிகள் புறக்கணித்ததாக வரலாறு இல்லை.

ராஜ்பவன்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வந்த நிலையில், என்ன காரணத்தினாலோ, அது தற்போது ஓய்ந்துள்ளது.. ஆளுநரை திமுக தரப்பு காட்டமாக விமர்சிப்பது இல்லை.. ஆனால், திருமாவளவன் அப்படி கிடையாது.. ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறி வருகிறது என்று ஓபனாக சொல்லிவிட்டார்.. தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று குரல் எழுப்பியதும் விசிகதான்.

ப்ராடக்ட்
அப்போதும் ஆளுநர் தரப்பு அமைதி காக்கவில்லை.. சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது என்று ஆளுநர் ரவி சென்னையில் ஒருமுறை பேசவும், அதற்கும் எதிர்ப்பு வலுவாக காட்டியது விசிக.. "ஆளுநர் 100 விழுக்காடு ஆர்எஸ்எஸ் ப்ராடக்ட்... ஆர்எஸ்எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஆளுமை அவர்.. ஆளுநர் பேசுவது இந்த தேசத்திற்கு நல்லதல்ல.. அவர் வகிக்கும் பொறுப்புக்கும் நல்லதல்ல" என்று மறுபடியும் திருமாவளவன் எச்சரித்திருந்தார். இன்றைய தினம் மறுபடியும் விவகாரம் கிளம்பி உள்ளது.

ஆளுநர் ரவி
"விந்திய மழையை அடிப்படையாக வைத்துதான் நார்த்தில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும், தென்பக்கம் இருப்பவர்களை திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர்கள் தான் 'திராவிடன்' என்ற வார்த்தையில் முதன்முதலில் குறிப்பிட்டார்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறுபடியும் கருத்து கூறியுள்ளார்.. மற்ற விஷயத்தில் பொறுமை காத்து வந்த திமுக, இதைக் கேட்டதுமே கொந்தளித்து விட்டது..

டிஆர் பாலு
மூத்த தலைவர் டிஆர் பாலு காட்டமான பதிலடி தந்தார்.. "கவர்னர், கவர்னர் ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம் கூட பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டவை தான் என்பதையும் நினைவூட்டுவதோடு, தமிழக ஆளுநர் தன் பதவியேற்பின்போது, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. அதேபோல திருமாவளவனும் ஆளுநரின் பேச்சை கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமா பதிலடி
"திராவிடன் என்பது மரபினம் அல்ல; நிலம் சார்ந்த ஒரு இனப்பிரிவு என்கிறார் ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி அவர்கள். இதுதான் திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு. திராவிடன் என்பது மொழிவழி தேசிய இனம் அல்ல. ஆனால் அது ஜீன் எனப்படும் குருதிவழி மரபினம் என்பது மானுடவியல் உண்மை.. திராவிடன் என்பது நிலம்வழி சார்ந்தது என்றால், ஆரியன் என்பதுவும் நிலவியல் சார்ந்த இனப்பிரிவு தானா? மரபினம் இல்லையா? ஆரியரான ஹிட்லரும் அதேபோல நிலம் சார்ந்த அடையாளத்தைக் கொண்டவர்தானா? ஆர்.எஸ்.எஸின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார்" என்று பதிலடி தந்திருந்தார்.

திருமாவளவன் மோசடி
திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பாஜக தமிழ்மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்து பதிலடியும் தந்துள்ளார்.. "திராவிடன், ஆரியன் என்பது மாயையே.. திராவிடம் என்பது நிலப்பரப்பே. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களை படுகுழியில் தள்ளிய நீதிக்கட்சி என்ற பெயரில் பொய்களை, திரிபுகளை, மோசடிகளை முன்வைத்த கும்பலின் அக்மார்க் தயாரிப்பு தான் திருமாவளவன் என்பதை தொடர்ந்து உறுதிபடுத்தி வருகிறார்.

நாராயணன் திருப்பதி
ஒருங்கிணைந்த இந்தியர்களை பிளப்பதற்காக வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட மோசடியே திராவிடர்கள், ஆரியர்கள் என்பது. சுதந்திர இந்தியாவில் தமிழை தாய் மொழியாக கொண்டிராத, தமிழரல்லாத ஒரு சிலரின் சதியே திராவிட இன அரசியல். திராவிடம் என்பது நிலப்பரப்பே. குருதிவழி மரபினம் என்பதே திரிபு''என்கிறார் நாராயணன் திருப்பதி.. இதனிடையே, ஆளுநர் பேசியது தொடர்பான விவாதங்கள் தற்போது இணையத்தில் சூடுபிடித்து வருகின்றன.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications