கலைஞர் பல்கலைக்கழக மசோதா.. 3 மாதத்திற்கு பின் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை: கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளைக் காரணம் காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
சட்டசபையில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்பின் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதாவில் கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் இருப்பார். பல்கலைக்கழக தலைவராகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமையும் முதல்வர் இருப்பார். அதுமட்டுமல்லாமல் வேந்தரின் முன் அனுமதியின்றி, யாருக்கும் கவுரவ பட்டங்கள் வழங்க இயலாது.
பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார். துணைவேந்தர் தேடல் குழுவில் வேந்தர் பிரதிநிதியாக உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதல்மைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியும், சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம்பெறுவர்.
தொடர்ந்து, தேடல் குழுவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் மூன்று பேர் பட்டியலில் இருந்து, துணைவேந்தரை வேந்தர் நியமிப்பார் உள்ளிட்ட ஷர்த்துக்கள் மசோதாவில் இருந்தன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்காமல் சுமார் 3 மாதங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்திருந்தார்.
இந்த நிலையில் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளைக் காரணம் காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications