முதல்வர்தான் தலைவர்.. அவர் சொல்வதை செய்வதே ஆளுநரின் வேலை.. ஆர்.என் ரவிக்கு எதிரான வழக்கில் குட்டு
சென்னை; தனது அமைச்சரவையில் மாற்ற செய்ய வேண்டும் என்று முதல்வர் சொன்னால்.. அதை செய்ய வேண்டியதே ஆளுநரின் வேலை. முதல்வர்தான் தலைவர்.. அவர் சொல்வதே "அலங்கார" தலைவர் ஆளுநரின் வேலை என்று உச்ச நீதிமன்றம் ஆளுநர் ஆர் என் ரவிக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியநிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்என் ரவிக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2006-11 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் தண்டனையை நிறுத்திட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.
பொன்முடியின் பதவிப்பிரமாணத்திற்கு ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்என் ரவிக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணை; இன்று நடைபெற்ற விசாரணையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும். ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்.
பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூறினால் அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூற முடியும்?.
ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அந்த நபர்/ அமைச்சர் குறித்து எனக்கு மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனப்படியே நாம் செயல்பட வேண்டும். தனது அமைச்சரவையில் மாற்ற செய்ய வேண்டும் என்று முதல்வர் சொன்னால்.. அதை செய்ய வேண்டியதே ஆளுநரின் வேலை. முதல்வர்தான் தலைவர்.. அவர் சொல்வதே "அலங்கார" தலைவர் ஆளுநரின் வேலை
ஆளுநர் மாநிலத்தின் சம்பிரதாய தலைவர் மட்டுமே. தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமானம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல
பொன்முடிக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை கெடு இல்லையென்றால்.. நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை.
ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும்? தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு தெரியாதா?"
ஒரு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால், அங்கு தண்டனை இல்லை என்றுதான் பொருள். தண்டனையே அங்கு இல்லாத போது கறைபடிந்தவர் என்று சொல்ல முடியாது. எந்த களங்கமும் இதில் இல்லை, என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications