கரண்டியால் சாப்பாடு போட்டுக் கொண்டே.. அண்ணாமலையிடம் சொன்ன அந்த வார்த்தை.. இதுதான் தமிழிசை..!
அண்ணாமலைக்கு விருந்து பரிமாறி உள்ளார் தமிழிசை சவுந்தராஜன்
சென்னை: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உணவு பரிமாறியுள்ளார்.. இன்றைய மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அன்றைய மாநில தலைவர் உணவு பரிமாறி உபசரித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Recommended Video
ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தும், விருந்தோம்பலை பெரிதும் மதித்து நடப்பர் தமிழிசை சவுந்தராஜன்.. பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் மகன் திருமண நிகழ்ச்சி கோவையில் நடந்தது.
அவினாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.. பல முக்கிய பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்...

தமிழிசை
அந்த வகையில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதேபோல, குஷ்பு, பாஜக விவசாய அணி தலைவர் மற்றும் மாநில துணைத் தலைவர் ஜி.கே நாகராஜன், எம்எல்ஏ காந்தி ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.. அப்போதுதான் திடீரென தமிழிசை செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது என்கிறார் ஜி.கே நாகராஜன்.

நெகிழ்ச்சி
அதை பற்றி அவர் சொல்லும்போது, "அண்ணாமலை, காந்தி, நான் மணமக்களை வாழ்த்திவிட்டுக் கீழே இறங்கினோம். முக்கிய நிர்வாகிகளுக்கு சாப்பிடத் தனியாக இடம் ஒதுக்கியிருந்தனர். அங்கு தமிழிசையும் இருந்தார்... அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் காந்தி, நான் உட்பட 3 பேரும் பந்தியில் உட்கார்ந்தோம்.. அப்போது ஆளுநர் அவர்களை சாப்பிடுமாறு கூப்பிட்டோம்.. உடனே ஆளுநரும், நீங்க சாப்பிடுங்க என்று சொன்னதுடன், அவராகவே வந்து எங்கள் 3 பேருக்கும் தலைவாழை இலை போட்டு, அன்போடு சாப்பாடும் பரிமாறினார்...

உணவு பரிமாறினார்
"கட்சியின் உண்மையான உழைப்பாளிகளான உங்களுக்கு உணவு பரிமாறுவதில் பெருமை கொள்கிறேன்" என்று சொல்லி கொண்டே ஆளுநர் எங்கள் 3 பேருக்கும் உணவு பரிமாறினார்.. அந்த வார்த்தை எங்களை மெய்சிலிர்க்க வைத்தது... புதுச்சேரி, தெலுங்கானா என 2 மாநிலங்களுக்கும் ஆளுநராக இருப்பவர், கட்சி தொண்டர்களுக்கு உணவு பரிமாறுவது சாதாரணமான விஷயம் கிடையாது.. வேறு யாரும் இதை செய்யவும் மாட்டார்கள். ஆளுநரின் அருகில் கூட யாராலும் போக முடியாது..

4 எம்எல்ஏக்கள்
இப்போது தமிழகத்தில் பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் தமிழிசை அவர்கள்தான்.. அவர் ஒரு கடுமையான உழைப்பாளி.. அவரின் உழைப்பும், இந்த கனிவும் தான் அவரை ஆளுநர் என்ற இந்த உயர்ந்த இடத்திற்கு கொண்டுவந்து இருக்கிறது" என்றார். அண்ணாமலைக்கு கரண்டி எடுத்து தமிழிசை சாப்பாடு பரிமாறும் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
