திமுகவில் 'சனாதனம்'- தலைவர், முதல்வர் பதவியை வேறு ஒருவருக்கு தருவீங்களா? உதயநிதிக்கு தமிழிசை கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் சனாதனத்தை கடைபிடிக்கிறீர்கள்; திமுகவில் சனாதனத்தை கடைபிடிக்கவில்லை எனில் வேறு ஒருவருக்கு கட்சித் தலைவர் பதவி, முதல்வர் பதவியை தந்துவிடுவீர்களா? என தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் கருணாநிதி நூற்றாண்டு சிலை திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாவது: அமித்ஷாவிற்கு புதுச்சேரியில் இருந்து சொல்கின்றேன். பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் வாருங்கள் டெல்லியில் பொதுவெளியில் லட்சம்பேர் கூடும் இடத்தில் சனாதனம் குறித்து விவாதிக்க நான் தயார் நீங்கள் தயாரா?

Governor Tamilisai Soundararajan slams Udhayanidhi Stalin for Sanatana Dharma remarks

நாங்கள் ஒழித்த சனாதனம்: சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சர் உள்ளார். இல்லையெனில் வேறு வேலைக்கு சென்று இருப்பார். சனாதனத்திற்கு எதிராக நாங்கள் போராடியதால் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆளுநர், எங்களால்தான் ஆடு மேய்க்காமல் அண்ணாமலை இன்று ஐ.பி.எஸ், வானதி ஸ்ரீனிவாசன் இன்று வழக்கறிஞர்.

வெட்கமா இல்லையா?: நாங்கள் ஒழித்த சனாதனத்தால் வந்து உட்கார்ந்து கொண்டு சனாதனம், சனாதனம் என பேசுகிறீர்களே? உங்களுக்கு வெட்கமா இல்லையா? நான் திறந்த வெளியில் சொல்கின்றேன் மோடி, அமித்ஷா, பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைவிட வெள்ளைக்காரார்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

இதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்: தமிழிசை நான் முன்னேறியது கடுமையாக படித்துதான் முன்னேறியிருக்கிறோம். இன்னொருவரின் முன்னேற்றத்தில் இன்னொருவருக்கு எப்படி சரியாக இருக்கும்? சனாதனம் குறித்து ஆ.ராசா எப்போதும் அப்படித்தான் பேசுவார். தவறான கருத்துகளை முன்னிறுத்துகின்றனர். இளைஞர்களுக்கு சனாதனம் குறித்து தவறான கருத்துகளை எடுத்துச் செல்கிறார்கள்.

திமுகவில் ஆ.ராசாவால் தலைவராக முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பதற்கு முன் உங்க கட்சியில் இருக்கும் சர்வாதிகாரத்தை முதலில் எதிர்க்கனும். ஜாதியை ஒழித்து எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறோம் என்கிற உதயநிதி ஸ்டாலின், மிகவும் அடிமட்டத்தில் இருந்து படித்து முன்னேறி வந்திருக்கும் ஒருவரை தலைவராக, முதல்வராக்கிவிட முடியுமா? நீங்கள் எதனையும் செய்யாமல் உலகத்துக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறீர்களே?.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+