ஆட்டுக்கு தாடி மாதிரிதான் ஆளுநர்.. சட்டசபையையே அவமதித்துவிட்டார்.. ஸ்டாலின் அட்டாக்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்படாமல், அவையிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிய சம்பவம், அரசியல் வட்டாரங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, "சட்ட விதிகளையும், பாரம்பரிய மரபுகளையும் மீறி ஆளுநர் மீண்டும் ஒருமுறை சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியுள்ளார்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும், சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது அரசியல் மரபாக இருந்து வருகிறது.

மேலும், இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடர் அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் வழக்கம்போல தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரை வாசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறி, ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்க மறுத்தார். "தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதம் தான் பாடப்பட வேண்டும்" என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் எந்த உரையும் வாசிக்காமல் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். இந்த நிகழ்வு அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, "ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாகவே அவை ஏற்க வேண்டும்" என்ற தீர்மானம், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்திற்குப் பிறகு அவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலை செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை அவமதிக்கும் செயலாகும்.
ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை' என்று பேரறிஞர் அண்ணா கூறியபோதிலும், அதனை முத்தமிழறிஞர் கலைஞர் வழிமொழிந்தபோதிலும் அந்த பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்தபோது தவறியதில்லை. அவர்களது வழியை பின்பற்றி நானும், அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை. இந்த அரசும் தவறியதில்லை."என்று கடந்த 2023, ஏப்ரல் 10 அன்று எடுத்துரைத்தேன்.
அந்த கொள்கையையொட்டியே ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் ஆணையிட்டேன். ஆனால் ஆளுநரோ ஏற்கனவே நடந்துகொண்டது போலவே இன்றும் நடந்துகொண்டது மிகவும் வருத்தத்திற்குரியது." என ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications