Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10க்கு 10 போதும்! எம்ஜிஆர், கலைஞர், ஜெ. போல விஜயகாந்திற்கு மெரினாவில் இடம்.. தொண்டர்கள் வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினா பீச்சில் இடம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 6.15 மணிக்கு காலமானார். விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டு தொண்டர்களும், ரசிகர்களும் கதறி அழுதனர். விஜயகாந்த் மறைவையடுத்து அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Govt give permit to Vijayakanth body buried in Marina beach Dmdk cadre request

இதேபோல் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால், விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு இருக்கும் கோயம்பேடு தலைமை அலுவலகமே மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. விஜயகாந்த் உடலை கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

முன்னாள் முதல்வர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வரிசையில் விஜயகாந்த் உடலையும் அடக்கம் செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஒருசில தொண்டர்கள், ரொம்ப அதிகம் எல்லாம் இடம் வேண்டாம். பத்துக்கு பத்து அளவில் இடம் தந்தால் மட்டும் போதும் என்றும் கூறி வருகின்றனர்.

தற்போது விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயகாந்த் உடல் நாளை சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு விஜயகாந்தின் உடல் வைக்கப்படுகிறது.

கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் மதியம் 1.00 மணியளவில் தீவுத்திடலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. என்று தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+