இன்னும் 5 வருஷத்துல.. 1 கிலோ வெங்காயம் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்குமாம்.. சீமான் சொல்லும் காரணம்
சென்னை: தக்காளி, வெங்காயம் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விளை பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வேளாண்மையில் அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று சாடினார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவே உங்களுக்கு உயர்வா இருக்கிறது என்றால் இன்னும் 5 வருஷம் கழிச்சி 200 ரூபாய்க்கு விற்கும் வெங்காயம்.. 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும். விளை பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வேளாண்மையில் அரசிடம் எந்த திட்டமும் இல்லை. தமிழ்நாட்டில் இவ்வளவு நில வளம் இருக்கு...

உழைக்கும் ஆற்றல் இருக்கு.. அதை விட்டுவிட்டு வெங்காயம் தக்காளியை வேற மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்கிறோம். அது ஒரு கேவலம். உலகத்திற்கு வேளாண்மை எப்படி செய்வது என்று கற்றுக்கொடுத்த ஒரு இனம் பக்கத்தில் போய் கடன் வாங்கி கொண்டு இருக்கிறது. வெங்காயத்தை பருப்பையும் இந்தியா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது. இங்க ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பருவ நிலை உள்ளது.
வெயிலா கொட்டும்.. மழையா கொட்டும்.. பனியா கொட்டும். ஆனால் நமக்கு அப்படி இல்லை. எல்லாம் கலந்து இருக்கும் ஒரு நிலப்பரப்பு.. எல்லா வளமும் இருக்கிறது. கடல் வளம் நில வளம் எல்லாம் இருக்கிறது. ஆனால் இதில் உழைப்பதற்கு ஆற்றல் உள்ள இளைஞர்கள் இருக்கிறார்கள். அதை நோக்கி நகரவே இல்லையே.. அடிப்படை தேவை உணவு... அத்தியாவசிய தேவை உயிர் தேவை... அதற்கு நாட்டில் என்ன திட்டம் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள்..
அப்புறம் நாட்டில் விலை வாசி உயர்ந்து விட்டது என்றால்.. ஏறும்... திடீர்னு ஒன்றும் ஏறவில்லை. எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது. விலையேற்றம் சுங்கச் சாவடி கட்டணம் , ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான லாரி கட்டணம் என எல்லாமும் அத்தியாவசிய பொருளில் ஏறுகிறது. இந்த செலவுகள் எல்லாம் சேர்ந்துதான் வெங்காயத்தில் ஏறுகிறது.

ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள் மக்களுக்கு எளிதாக கொண்டு வருகிற மாதிரி ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது... என்ன திட்டம் இருக்கிறது. வேளாண்மையை விட்டு வேளாண் குடி மக்கள் வெளியேறிவிட்டார்கள்.
100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்து விவசாயத்தை வேளாண்மை செய்வதற்கு ஆளே இல்லாமல் முடித்துவிட்டார்கள். பிறகு விலைவாசி ஏறத்தான் செய்யும். நாம் தமிழர் ஆட்சி வந்தால் குறையும். ஏன்னு சொல்லுங்க.. நானே வேளாண்மை செய்வேன்.. அரசே வேளாண்மை செய்யும். நிர்ணயிக்கப்பட்ட ஒரே விலையில் நாடு முழுவதும் நாங்களே விநியோகம் செய்வோம். இவ்வாறு சீமான் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications