Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன் கேட்டால் இல்லைன்னு சொல்லாமல் டக் டக்குன்னு கொடுங்க! கூட்டுறவு வங்கிகளுக்கு பறந்த உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் கேட்டால் இல்லையென்று சொல்லாமல் காரணங்களை கூறி தட்டிக்கழிக்காமல் விரைந்து கடன் வழங்க வேண்டும் என கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் இவ்வாய்ப்பினை பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு;

Govt instructs co-operative banks to provide loans quickly without saying no when asked for a loan

நடப்பு நிதியாண்டில் பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 31.10.2023 வரை 8.59 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.7,081 கோடி அளவிற்கு உழவர் கடன் அட்டை (Kisan Credit Card - KCC) திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்கு மட்டுமன்றி, கடந்த 2022-2023 ஆம் ஆண்டு முதல் கால்நடை பராமரிப்பு மற்றும் அவை சார்ந்த இதர பணிகளுக்கும் உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் நடைமுறை மூலதனக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் (2023-2024) 31.10.2023 வரை 2.02 இலட்சம் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.1,085 கோடி அளவிற்கு கேசிசி திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் (2023-2024), 30.09.2023 வரை 37,461 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,334 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் (2023-2024), 30.09.2023 வரை 3,678 கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.14 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் அவர்கள் வாழ்க்கையை மேற்கொள்ளவும், அவர்களின் பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் 30.09.2023 வரை 6,052 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.29 கோடி அளவிற்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் விலை குறைவாக உள்ளபோது விவசாயிகள் தமது தானியங்களை இருப்பு வைத்து இலாபகரமான விலை கிடைக்கும் போது அவற்றை விற்றுப் பயனடையும் வகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 30.09.2023 வரை ரூ.128 கோடி மதிப்பிற்கு தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் மூலம் நடப்பு நிதி ஆண்டில், 30.09.2023 வரை 29.55 இலட்சம் நபர்களுக்கு ரூ.20,953 கோடி அளவிற்கு நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்பின்கீழ் 6,762 கடன் வழங்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் விரைந்து கடன் வழங்கும் பணியினை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+