Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன் இந்த தாமதம்..? சித்த மருத்துவத்தை சரியாக பயன்படுத்தவில்லையோ.. முழுமையாக கையில் எடுக்கலாமே?!

சித்த மருத்துவத்தை அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஏன் இவ்வளவு தாமதம்... ஏன் இவ்வளவு யோசனை.. சட்டுபுட்டுனு இறங்கி சித்தாவை அரசு கையில் எடுக்கலாமே.. இன்னும் என்ன தயக்கம்?" என்ற கேள்வி வலுவாக எழ ஆரம்பித்துவிட்டது.. இதனால் நம்முடைய சித்த, ஆயுர்வேத மருத்துவத்தை அரசுகள் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது!

இந்த கொரோனா ஒரு புதுவித வைரஸ், உலகம் இதுவரை சந்திக்காதது.. மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் முட்டி மோதி வருகின்றன.

இன்னொரு பக்கம் மேலைநாடுகளில் கொத்து கொத்தாக விழுந்து மடிந்து கொண்டிருந்தவர்கள்.. இந் நிலை நம் நாட்டிலும் உருவாக ஆரம்பித்துள்ளது.. நாளுக்கு நாள் இந்த தொற்று எண்ணிக்கை உயர்ந்தும் வருகிறது. இது மத்திய - மாநில அரசுகளுக்கே பெரும் சவாலாகவும் உள்ளது.

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம்

இதை பார்க்கும்போது தங்களையும் அறியாமல் மக்களுக்கு ஒரு பீதி உணர்வு வந்துவிட்டது.. எப்படியாவது யார் மூலமாவது உயிரை காப்பாற்றி கொண்டால் போதும் என்ற முடிவுக்கும் ஒரு கட்டத்தில் வந்துவிட்டனர்.. அதனால்தான் ஆயுர்வேத, சித்த மருத்துவத்தை பற்றின பேச்சுகளும் அதிகமாகவே எழுந்து வருகிறது. ஆனால் அரசுகள் இந்த மருத்துவத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.. அதேசமயம், 2 மாதத்துக்கு முன்பேயே இத்தகைய மருத்துவத்தை பயன்படுத்தி இருந்தால் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை குறைத்திருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை தாக்குகிறது என்பதுதான் கொரோனாவின் அடிப்படையான விஷயம்.. அந்த வகையில் இதை அணுகும்போது, நோய் எதிர்ப்புக்கு சரியான மருந்து நம் சித்த மருத்துவத்தில் தாராளமாக பரவி கிடக்கிறது... சித்த மருத்துவர்களும் ஆணித்தரமாக தங்கள் கருத்தை சொல்லும்போது, "சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது, ஆனால் அரசுதான் எங்களை புறக்கணிக்கிறது" என்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி வருகின்றனர்.. சிலர் அரசு மீது வருத்தமும் தெரிவிக்கின்றனர்.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

எப்படியும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஓராண்டு வரை ஆகலாம் என்கிறார்கள்.. அதுவரை கொரோனா நோய் பாதிப்புகளை சமாளிப்பதற்காக நம்மிடம் எந்தெந்த மருத்துவ முறைகளில், என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ, அவை அனைத்தையும் பயன்படுத்துவதில் தவறில்லை என்றே தெரிகிறது.

மாற்று மருந்துகள்

மாற்று மருந்துகள்

ஆங்கில மருத்துவத்தை போலவே சித்த மருத்துவமும் நமக்கு பொக்கிஷங்கள்தான்.. ஆனால், எப்படி ஆங்கில மருத்துவத்தில் மாற்று மருந்து பயன்படுகிறதோ அப்படித்தான் சித்த மருத்துவம் உட்பட அனைத்து முறைகளிலும் மாற்று மருந்துகள் உள்ளன. அந்த வகையில் சித்த மருத்துவத்தை குறைத்து எடை போடுவதற்கில்லை. ஆங்கில மருத்துவத்தில் நோய் குறித்த ஆய்வுகள் அதிகம் என்றால், சித்த மருத்துவத்தில் நோய் தடுப்பு குறித்த மருந்துகளே அதிகம்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்

அது மட்டுமல்ல, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட பல்வேறு வைரஸ்கள் நம்மை தாக்கியபோது காத்ததும் இதே சித்த மருத்துவம்தான்.. அதனால்தான் மறைந்த ஜெயலலிதா நிலவேம்பு குடிநீர் குறித்த விழிப்புணர்வினை அதிகம் ஏற்படுத்தினார்.. அதன் பலனையும் நாம் நேரடியாக பெற்றோம்.. அதற்கு காரணம், தமிழக அரசும் அப்போது, இந்த சித்த மருத்துவத்தின் தன்மையையும் ஆராய்ந்து செயல்பட்டது.. அதுபோலவே இந்த வைரஸூக்கும் சித்த மருத்துவத்தை எந்த முயற்சி செய்து பார்த்தாலும் அது தவறில்லை என்றே சொல்ல தோன்றுகிறது!

பாரம்பரியம்

பாரம்பரியம்

ஒருவேளை மற்ற வைரஸுக்குதான் சித்த மருந்து பொருந்தும், இந்த கொரோனாவுக்கு பொருந்தாது என்று சிலர் நினைக்கிறார்கள்.. அது தவறு.. இந்த வைரஸ் துவங்கியதே சீனாவில்தான்.. அந்நாட்டின் மருத்துவத்தில், இந்த பாரம்பரிய வைத்தியத்தையும் சேர்த்துதான் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தந்து அதன்மூலம் அவர்கள் குணமும் அடைந்துள்ளனர்.. இதுவே நமக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுதான். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்தாலே இந்த நோயின் தீவிரம் கட்டுப்படுத்தப்படும் என்று கண்டுப்பிடித்து ஆய்வாளர்கள் சொல்லி இருப்பதும் நமக்கு கிடைத்த மிகப்பெரிய சான்ஸ்தான்... அதனால்தான் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்றவைகளை முற்றிலும் நாம் நிராகரித்துவிட முடியாது.

ஆய்வக சோதனை

ஆய்வக சோதனை

இன்றும்கூட எத்தனையோ சித்த மருத்துவர்கள் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்று தொடர்ந்து நம்புக்கையுடன் சொல்லும்போது, இவர்களை அரசு பரிசீலிக்க ஏன் முன்வரவில்லை என்ற சந்தேகம் எழுகிறது. இவர்களின் கோரிக்கையை ஏற்கவேண்டும்.. இந்த சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் உள்ள ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.. அதன் வீரியம், தன்மைகள் என்னென்ன என்பது குறித்து ஆராய வேண்டும்.

அமுக்கிரா கிழங்கு

அமுக்கிரா கிழங்கு

தற்போது இந்தியாவின் சித்த மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் அமுக்கிரா கிழங்கை (அஸ்வகந்தா) கொரனோ சிகிச்சை தொடர்பானவற்றில் பயன்படுத்த முடியுமா என்ற கோணத்தில் ஆய்வுகள் தொடங்கியுள்ளன. இந்த அமுக்கிரா கிழங்கானது மூட்டு வலி, சர்க்கரை உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வேர், இலை, தண்டு என மொத்த செடியுமே மருத்துவ குணம் வாய்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது. எனவே இதன் பக்கம் தற்போது ஆய்வுகள் திரும்பியுள்ளன.

கொள்ளை நோய்

கொள்ளை நோய்

இப்போதைக்கு, எந்த அளவுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுமோ அவ்வளவும் அரசின் தலையில்தான் விழுந்து கொண்டிருக்கிறது.. இவைகளை சமாளிக்க மட்டுமல்ல, நம் பொக்கிஷமான சித்த, ஆயுர்வேத மருத்துவத்தை கைவிடாமலும், அதேசமயம் இப்படிப்பட்ட கொள்ளை நோய்களை ஓட ஓட விரட்டவும் அவைகளை பயன்படுத்தி கொள்வதே சிறந்த புத்திசாலித்தனம்!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+