தமிழ் பேரரசு கட்சியை தொடங்கினார் கவுதமன்.. தமிழக மக்களின் பேராதரவை பெறுவோம் என சூளுரை
சென்னை: தமிழ்ப் பேரரசு கட்சியை இயக்குநர் கவுதமன் சென்னை விருகம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழ் திரைப்பட இயக்குநராக அறியப்படும் கவுதமன், மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்தார். பிற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ஊக்கப்படுத்தினார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வந்தவர் காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க முன்னெடுக்கும் முயற்சிகள், ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம் என விவசாய நிலங்களை சுரண்டுவதற்காக போடப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் எதிராக போராடிய விவசாயிகளுக்கு களத்தில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
தமிழ் இன உணர்வு, தமிழர் நிலம் உரிமை என தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக செயல்பட்டு வந்த கவுதமன், தனது பொதுவாழ்க்கையை அரசியல் கட்சி மூலம் விஸ்திகரிப்பு செய்ய உள்ளதாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி அறிவித்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் தமிழ்ப் பேரரசு என்ற கட்சியை சென்னை விருகம்பாக்கத்தில் அவர் தொடங்கி வைத்தார். கட்சிக் கொடியையும் அவர் வெளியிட்டார்.
இது தொடர்பாக கவுதமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக மக்களின் கலை, கலாச்சாரம், இயற்கை வளம், மொழி போன்ற உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகிறோம். உரிமைகளை மீட்டெடுக்க அரசியல் எனும் ஆயுதத்தை கையில் எடுப்பதாகவும் தூய்மையான செயல்பாட்டால் தமிழக மக்களி பேராதரவை பெறுவோம்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். இனம், மொழி, வளம் காக்க அரசியல் சக்தியாக உருவெடுக்கிறோம் என்றார் கவுதமன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications