கிராம நத்தம் நிலம் வாங்கலாமா? நில வகைப்பாடு என்னென்ன? நத்தம் நிலத்தில் பாதை இருந்தால்? இவ்ளோ இருக்கா
சென்னை: கிராம நத்தம் நிலம் என்றால் என்ன? நத்தம் நிலங்களை வாங்கலாமா? கிராம நில வகைப்பாடு என்றால் என்ன? அதன் வகைகள் என்னென்ன? எப்படி அவை வகைப்படுத்தப்படுகின்றன? இதன் பணிகள் என்னென்ன? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கிராமம், நகரம் என இரு இடங்களிலுமே நிலங்களின் வகைகள் பிரிக்கப்படும்.. ஆனால், எந்த இடத்தில் மக்கள் வாழ முடியும், அதற்கான சூழல் உள்ளது? என்பதை அரசுதான் முடிவு செய்யும்.. மக்கள் வாழும் இடம் அல்லது வாழக்கூடாத இடம், பிற நோக்கத்திற்காக இருக்கக்கூடிய இடம் என வருவாய்த்துறை பிரிக்கும்.

வகைகள்: அந்தவகையில், நத்தம், மேய்க்கால், நன்செய், புன்செய், மானாவாரி, தீர்வை ஏற்படுத்தக்கூடிய தரிசு, தீர்வை ஏற்படுத்தாத தரிசு, பட்டா நிலம், அரசு புறம்போக்கு, ஒருபோக மற்றும் இருபோக நன்செய் என்று நிலங்களை தனித்தனியாக வகைப்படுத்தும்.. இந்த ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு நோக்கமுடையவை.. ஒவ்வொரு உபயோகத்துக்காக பயன்படுத்தப்படக்கூடியவை. இவை அனைத்துமே வருவாய்த்துறை மற்றும் நில அளவை துறையினர்களால் பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கும்
கிராம நத்தம் நிலம் என்பது, ஏழை மக்கள் குடியிருக்கவும், விவசாயம் செய்யவும்தான் ஒதுக்கப்பட்டு வந்தன. இவைகளை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது. எனினும் இதில் சில நடைமுறை சிக்கல்கள் எழுந்ததால், நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது.
கிராம நத்தம் : தற்போது நத்தம் பட்டா மாறுதல் செய்ய வசதியையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பட்டா மாறுதல் செய்வது மட்டுமின்றி, உட்பிரிவு செய்வது உட்பட எல்லாவற்றையுமே குறைவான கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே எளிதாக பெற்றுக்கொள்ளலாம். eservices.tn.gov.in என்ற வெப்சைட்டிற்குள் அடையாளச் சான்று போன்ற ஆவணங்களுடன் பட்டா விண்ணப்பித்து, டவுன்லோடும் செய்து கொள்ளலாம்
சிலருக்கு கிராம நத்தம் நிலத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்பதில் சந்தேகம் உண்டு.. தாராளமாக வாங்கலாம்.. ஆனால், குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டும் இருந்தால், தாராளமாக வாங்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
பொதுப்பாதை: அதேபோல, நத்தம் அல்லது வேறு ஏதாவது அரசு புறம்போக்கு நிலங்களில் பாதைகள் இருந்தாலும், அது பொதுபாதையாகவே கருதப்படும். உதாரணத்துக்கு வண்டிப்பாதை, சாலை, நிலவியல் அல்லது பூஸ்துதி பாதை என்று பத்திரத்தில் பதிவாகியிருந்தால், அதுவும் பொது பாதையாகவே கருதப்படும்.. அதேபோல வேறு பாதையில்லாமல், உங்கள் நிலத்தை தாண்டிதான் செல்ல வேண்டுமென்றால், அங்கு கட்டாயம் பாதைக்கு வழிவிட்டுத்தான் ஆகவேண்டும்.
நத்தம் நிலங்களில் பட்டா மாறுதல் செய்யவேண்டும் என்றாலோ அல்லது உட்பிரிவு செய்ய வேண்டும் என்றாலோ, அனைத்தையுமே ஆன்லைனில விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனால், நத்தம் அ-பதிவேடு, சிட்டா, புல வரைப்படங்களை ஆன்லைனிலேயே டவுன்லோடு செய்து கொள்ளமுடியும்.. பட்டா, பத்திரங்களின் அடிப்படையில், உரிமைகளை எளிதாக பெற முடியும்.
இதற்கு eservices.tn.gov.in. என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்க சென்று, உரிய ஆவணங்கள், உரிய சான்றுகளை சமர்ப்பித்து, விண்ணப்பிக்க வேண்டும்... இதற்கு குறைந்த கட்டணமும் செலுத்த வேண்டும்.. இதற்கு பிறகு விண்ணப்ப ஐடி ஒன்று பிரத்யேகமாக உங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிடும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications