கிராம நத்தம் நிலம்.. முத்திரை கட்டணம் ஜாஸ்தி.. பதிவுக்கட்டணம் அதுக்கு மேல.. அரசுக்கு பெயிரா கோரிக்கை
சென்னை: கிராம நத்தம் வகைபாடு உள்ள மனைகளை எந்தவித நிபந்தனையுமின்றி தங்கு தடை இன்றி பதிவு செய்ய வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.. FAIRA கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நேரு நகர் நந்து தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

சிறப்புரை: தேசிய செயல் செயலாளர் செந்தில்குமார், தேசிய செயற்குழு தலைவர் வினோத் சிங் ரத்தோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து, பதிவுத்துறை குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள் இவைகள்தான்:
"பதிவுத்துறையில் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிற நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பு குறித்த வரைவு தற்போது பதிவுத்துறை இணையதளத்தில் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கிராமப்புறங்களில் இருக்கிற பொதுமக்களால் அறிய முடியவில்லை.
வழிகாட்டி மதிப்பு: எனவே, அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த வரைவு சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களின் வெளியில் உள்ள தகவல் பலகையில் ஒட்டி, வகைபாடு மதிப்பின் அடிப்படையில் இல்லாமல், தெரு மதிப்பு மற்றும் சர்வே எண் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயித்து, அதனை அனைத்து பொதுமக்களும் அறியும் வகையில், புதிய வழிகாட்டி மதிப்பு வரைவினை வெளியிட வேண்டுகிறோம்.
ரியல் எஸ்டேட் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு விண்ணை மட்டும் முத்திரைத் தீர்வை கட்டணம் ஒரு சதவீதம் மற்றும் கண்ணை கட்டும் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் என்ற கட்டணத்தை திரும்பப் பெற்று, முன்பு இருந்தது போல பதிவு கட்டணம் மட்டும் ரூபாய் 10,000 என மாற்றியமைத்து உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்.
அடுக்குமாடி குடியிருப்பு: அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்துள்ளதால், அதற்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு முதல் ஐந்து மடங்கு வரை உயர்ந்து பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி, முன்பு இருந்தது போலவே நிலத்திற்கான பிடிபடாத பாகத்திற்கு மட்டும் கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்யும் வகையிலும், அதற்கான கட்டணம் முன்பிருந்தது போன்று 1 சதவீதம் எனவும் மாற்றம் செய்ய வேண்டுகிறோம்.
பதிவுத்துறையில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகளை முத்தரப்பு குழு அமைத்து, இதில் பதிவுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து விரைவாக களைந்திட வேண்டுகிறோம்.
கிராம நத்தம் வகைப்பாடு: கிராம நத்தம் வகைபாடு உள்ள மனைகளை எந்தவித நிபந்தனையும் இன்றி, தங்கு தடை இன்றி பதிவு செய்ய வேண்டுகிறோம். நிலங்களின் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட அதிகமாக இருந்தால் குறைவு முத்திரை தீர்வை சட்ட பிரிவு 47/A1 இன் கீழ் சரியான சந்தை மதிப்பிற்கு ஈடாக பதிவு செய்தும் பிறகு வருவாய் துறையின் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு முரண்பாடுகளை களையவும் சட்டம் வழி வகுத்துள்ளது.
ஆனால் பதிவுத் துறை குறைவு முத்திரை தீர்வை சட்ட பிரிவு 47/A1 இன் கீழ் ஆவணங்களை பதிவு செய்ய மறுக்கிறது. இது மேற்கண்ட குறைவு முத்திரை தீர்வை சட்டத்திற்கு எதிரான செயலாகும் ஆகவே முரண்பாடுள்ள வழிகாட்டி மதிப்புள்ள சொத்துக்களை மேற்கண்ட சட்ட பிரிவின் கீழ் எந்த விதமான தங்கு தடையின்றி பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
கிரைய ஒப்பந்தம்: பதிவுத்துறையில் கிரைய ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம் உள்ளிட்ட பலவகையான ஆவணங்களுக்கு தற்போது உயர்த்தப்பட்டிருக்கிற முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் போன்றவற்றை பொதுமக்கள் நலன் கருதி, வெகுவாக குறைப்பதற்கு அரசு முன்வர வேண்டுகிறோம்.
பதிவுத்துறை அலுவலர்கள் ஒரு சிலர் ஆள் மாறாட்டம் மூலமும், போலி ஆவணங்கள் மூலமும் பதிவு செய்துள்ள போலி ஆவணங்களை ரத்து செய்து, அப்பாவி பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தற்பொழுது நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள போலி ஆவண ரத்து சட்டம் சம்பந்தமாக பதிவுத்துறை மேல் நடவடிக்கை எடுத்து, மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுகிறோம்.
நிலங்கள்: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என்கிற அடிப்படையில் மாவட்டங்களின் அடிப்படையில் மனைகளுக்கும் நிலங்களுக்கும் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்ய பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்.30103/L2/2023, 18.08.2023ல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மாநகராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களுக்கான மதிப்பு குறிப்பிடப்படவில்லை. பல மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பெரும்பகுதி விவசாய நிலங்கள் உள்ளது. குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு சம்பந்தமான மேற்கண்ட வழிகாட்டு சுற்றறிக்கையை பதிவுத்துறை உடனடியாக திரும்ப பெற வேண்டுகிறோம்" என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications