உச்சம் அடைந்த கிராஜுவிட்டி.. நாடு முழுக்க பறந்த குட் நியூஸ்.. கடைசியில் மொத்தமாக ஏமாந்த ஊழியர்கள்
சென்னை: மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இதுவரை புதிய Gratuity விதிமுறைகள் அமலுக்கு வரவில்லை.
இந்தியாவின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. மேற்கு வங்கம் வரைவு விதிகளை முன்கூட்டியே வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு, டெல்லி மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகள் விதிகள் இணக்கத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன. தமிழ்நாட்டில் இந்த 4 சட்டங்களில் 3 சட்டங்கள் அமலுக்கு வரும் சூழல் உள்ளது.

டெல்லி நான்கு சட்டங்களில் ஒன்றான சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரைவு விதிகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் எஞ்சிய விதிகளை முன்கூட்டியே வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நான்கு தொழிலாளர் சட்டங்களில், ஊதியக் குறியீடு, 2019, தொழில்துறை உறவுகள் குறியீடு, 2020, சமூக பாதுகாப்பு குறியீடு, 2020 மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு, 2020 ஆகியவை அடங்கும். இந்தச் சட்டங்கள் நவம்பர் 21, 2025 முதல் நடைமுறைக்கு வரும், தற்போதுள்ள 29 தொழிலாளர் சட்டங்களை இவை ஒழுங்குபடுத்தும்.
கடுமையான எதிர்ப்பு
பாதுகாப்பு அம்சங்களில் உள்ள குறைபாடுகள், நல வாரியங்களின் மறுசீரமைப்பு மற்றும் மாநிலத்தின் தற்போதைய நலத் திட்டங்கள் புதிய சட்டங்களின் கீழ் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த தெளிவின்மை போன்றவையே இவர்களது முக்கிய கவலைகளாகும்.
அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு இதை கடுமையாக எதிர்த்து உள்ளது. புதிய ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பல தொழிலாளர் நல வரிகள் நிறுத்தப்பட்டதால், சில துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே சிரமங்கள் தொடங்கிவிட்டன. "பீடி தொழிலாளர்களுக்கான வரியை எடுத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வேலை செய்யும் பெண்கள். அவர்களுக்கு முன்பு சில உதவிகள் கிடைத்தன, ஆனால் ஜி.எஸ்.டி.யால் அது நின்றுவிட்டது என்று குற்றச்சாட்டுகளை வைக்கின்றன.
புதிய Gratuity விதிமுறைகள் அமலுக்கு வரவில்லை
மத்திய அரசின் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை புதிய Gratuity விதிமுறைகள் அமலுக்கு வரவில்லை.
இந்தியாவின் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தி, நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பணிக்கொடை விதிகள்.. அதாவது "Gratuity" தொடர்பான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள், பகுதி நேர மற்றும் டிஜிட்டல் தளப் பணியாளர்கள் ஆகியோருக்கும் பணிக்கொடை நன்மைகளை விரிவுபடுத்துகின்றன. மேலும், நோய்வாய்ப்படுதல், உடல்நலக் குறைவு அல்லது மரணம் போன்ற சூழ்நிலைகளில் தகுதி நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
Gratuity விதிகளில் மாற்றம்
Gratuity ஊதிய வரையறைகள் சீரமைக்கப்பட்டு, முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தனியார் துறை ஊழியர்களுக்கு வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 20 லட்சமாகவும், அரசு ஊழியர்களுக்கு ரூ. 25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள், இந்திய ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தவும், நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவைத் தவறவிட்டால், ஆண்டுக்கு 10 சதவீத வட்டி விதிக்கப்படும். விரைவான செயலாக்கம் மற்றும் பரந்த பாதுகாப்பு மூலம், புதிய விதிகள் ஊழியர்களுக்கு ஒரு நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கும் நோக்கில் அமைந்துள்ளன.
ஊழியர்களுக்கான விரிவான பாதுகாப்பு
புதிய விதிகளின்படி, பணிக்கொடை இனி நீண்டகால நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே என்ற நிலை நீங்கியுள்ளது. தற்போது, ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள், டிஜிட்டல் தளப் பணியாளர்கள், மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என அனைவருக்கும் பணிக்கொடை பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சேவை காலத்திற்குப் பிறகு ஏற்படும் மரணம், உடல்நலக் குறைவு அல்லது ராஜினாமா போன்ற சூழ்நிலைகளுக்கும் தகுதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எளிதாக்கப்பட்ட தகுதி விதிமுறைகள்
பெரும்பாலான ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஐந்து வருட சேவைத் தேவை அப்படியே இருந்தாலும், விதிகள் இப்போது மிகவும் எளிமையாக உள்ளன.
1.நோய், அங்கீகரிக்கப்பட்ட விடுப்பு, வேலைநிறுத்தங்கள் அல்லது தற்காலிக மூடல்கள் போன்ற காரணங்களால் ஏற்படும் இடைவெளிகள், சேவை இடைவெளிகளாகக் கருதப்படாது.
2,மரணம் அல்லது நிரந்தர உடல்நலக் குறைவு ஏற்பட்டால், குறைந்தபட்ச சேவைத் தேவை பொருந்தாது.
3. ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களுக்கு, குறுகிய கால பணிக்காலம் என்றாலும், விகிதாசார பணிக்கொடைக்கு தகுதியுடையவர்கள்.
மாற்றப்பட்ட ஊதிய அமைப்பு மற்றும் கணக்கீடு
4. அடிப்படை பார்முலா ("கடைசியாகப் பெற்ற சம்பளம் × 15/26 × முழுமையான சேவை ஆண்டுகள்") மாறாமல் இருந்தாலும், விதிகள் இப்போது ஊதியக் கூறுகளைத் தெளிவுபடுத்துகின்றன.
5.அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி மொத்த சம்பளத்தில் குறைந்தது 50 சதவீதமாக இருக்க வேண்டும். இது, செயற்கையான ஊதிய மறுசீரமைப்பு மூலம் பணிக்கொடையைக் குறைப்பதில் இருந்து முதலாளிகளைத் தடுக்கிறது.
6. பருவகாலப் பணியாளர்களுக்கு, வேலை செய்யும் பருவத்திற்கு ஏழு நாட்கள் ஊதியத்தின் அடிப்படையில் பணிக்கொடை வழங்கப்படும்.
ஆனால் இந்த விதிமுறைகள் இன்னும் எந்த நிறுவனத்திலும் அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications